உள்ளூர் செய்திகள்

நேர்மை நம்மைக் காக்கும்

* அழிவுக்கு முன்னால் அகந்தை. விழுவதற்கு முன்னால் தற்செருக்கு. அகங்காரம் வரும்போது அதற்குப் பின்னே அவமானமும் வந்துசேரும்.* அக்கிரமக்காரர் எதிர்பார்ப்பது அழிந்தே போகும். நேர்மையாளனோ இடுக்கண்ணிலிருந்து விடுவிக்கப்படுவான்.* பலசாலியைவிடக் கோபம் கொள்வதில் மிதமாயிருப்பவனே சிறந்தவன். ராஜ்யங்களைக் கைப்பற்றுபவனை விடத் தன் உணர்ச்சியை அடக்கியாளுபவனே சிறந்தவன்.* ஒடுக்கி அமுக்கப்பட்டவர்களுக்குக் கடவுளே அடைக்கலமானவர். சங்கட வேளைகளிலும் அவரே அடைக்கலமானவர்.* அடக்குமுறைகளில் நம்பிக்கை வைத்திருக்க வேண்டாம். கொள்ளைத்தனத்தில் வீணாகிவிட வேண்டாம். செல்வம் பெருகினால் அவற்றின் மீது உங்கள் இருதயத்தை வைத்து விட வேண்டாம்.* 'கடவுளே எனக்குத் துணை. மனிதன் எனக்கு என்ன செய்வானென்று அஞ்சமாட்டேன்' என்று தைரியமாய்ச் சொல்லலாமே!- பைபிள்