உள்ளூர் செய்திகள்

பணிவு இருந்தால் உயரலாம்

* பரமண்டலத்திலே இருக்கிற உங்கள் பிதா உத்தமராயிருப்பது போல நீங்களும் உத்தமராக இருங்கள்.* தாழ்ந்த நிலையில் உள்ள சகோதரன் தன் உணர்வை நினைத்து ஆனந்தம் அடைவானாக.* உழைப்பாளி அவமானப்படத் தேவையில்லை.* உன் முகத்தின் வியர்வையில் ரொட்டி சாப்பிடுவாயாக.* உறக்கத்தை விரும்பாதே. விரும்பினால் வறுமை அடைவாய். கண்விழித்திரு. திருப்தியான அளவு உணவு பெறுவாய்.* தன்னைத் தானே உயர்த்திக் கொள்கிறவன் தாழ்த்தப்படுகிறான். தன்னைத்தானே தாழ்த்திக் கொள்பவனோ உயர்த்தப்படுகிறான்.* உழைப்பாளி குறைவாகச் சாப்பிடுகிறானோ, மிகுதியாகச் சாப்பிடுகிறானோ அவனது உறக்கம் இனிமையானது. ஆனால், பணக்காரனின் ஏராளமே அவனைத் தூங்கும்படி அவஸ்தைப் படுத்தாது.* உன்னைக் காக்கிறவர் உறங்கமாட்டார். கர்த்தர் தமக்கு பிரியமானவனுக்கே உறக்கத்தைத் தருகிறார்.- பைபிள்பொன்மொழிகள்