உள்ளூர் செய்திகள்

விடாப்பிடியாய்க் கேளுங்கள்!

* நாம் எதைச் செய்தாலும் தேவ மகிமைக்காகச் செய்ய வேண்டும். மனிதனின் புகழ்ச்சிக்காகச் செய்தால் பரலோக பரிசை இழந்து விடுவோம்.* உலகில் தன்னைத் தாழ்த்துகிற போது தான் உண்மையான கவுரவம் கிடைக்கிறது, தன்னைத்தானே தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.* நம்முடைய திறமைகளையும், வரங்களையும் பயன்படுத்தும் விதம் குறித்து கடவுள் நியாயம் அளிப்பார்.* அனைவருக்கும் தேவைகள் உள்ளன. அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய கடவுள் விரும்புகிறார். பல தேவைகளை நம்முடைய குழந்தைகள் மூலம் பூர்த்தி செய்கிறார்.* கடவுளிடம் தொடர்ந்து கேட்டதால் அவன் பெற்றுக் கொண்டான். நாமும் அவரிடம் விடாப்பிடியாய்க் கேட்டால் பெற்றுக் கொள்வோம்.* சாந்த சுபாவம் கொண்டவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.* செல்வத்தைச் சேர்க்க விரும்புகிறவன் பேராசைக்காரனாகிறான், பண ஆசை அனைத்து தீமைகளுக்கும் வேராயிருக்கிறது.- பைபிள் பொன்மொழிகள்