உள்ளூர் செய்திகள்

அன்பு கடவுளிடமிருந்து வருகிறது

* பகைமை சண்டைகளை எழுப்பிவிடும். தனக்கு இழைத்த தீங்கு அனைத்தையும் அன்பு மன்னித்து மறக்கும்.* ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக. ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்.* தொலைவில் இருக்கும் உடன்பிறந்தாரை விட அண்மையில் இருக்கும் நண்பரே மேல்.* எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர் பேறு பெற்றோர். துன்பநாளில் ஆண்டவர் அவரை விடுவிப்பார்.* உன் சகோதரர்கள் ஏழ்மைப்பட்டு இளைத்துப்போனால் அவர்களுக்கு உதவு.* முழுமனத் தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரை ஒருவர் அன்புடன் தாங்குங்கள்.* உங்களுக்குள் ஒருவருக்கொருவர் மட்டுமின்றி எல்லாருக்கும் எப்பொழுதும் நன்மை செய்யவே நாடுங்கள்.* விருந்துக்கு அழைக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையுங்கள்.* சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள். படுக்கையில் உங்கள் உள்ளத்தோடு பேசி அமைதியாயிருங்கள்.பைபிள் பொன்மொழிகள்