உள்ளூர் செய்திகள்

மனத்தூய்மையை விரும்பு!

* நீதியின் பாதையில் தான் ஜீவன் உண்டு. ஆதலின் அந்தப்பாதையின் எந்தப்புறமும் மரணம் இல்லை.* மூடர்களின் வாயில் அகப்பட்ட நீதிமொழிகள் குடிகாரன் கையில் அகப்பட்ட ஒரு முள்போன்றது.* 'என் அகத்தைச் சுத்தமாக்கினேன், என் தீவினையிலிருந்து தூய்மையானேன்' என்று எவன் தான் சொல்ல முடியும்?* அறிவுக்கு முன்னால் அகந்தை. விழுவதற்கு முன்னால் தற்செருக்கு.* அகங்காரம் வரும்போது அதற்குப் பின்னே அவமானமும் வந்து சேரும்.* அகத்தூய்மையை விரும்புபவனை அவனுடைய உதடுகளின் நளினத்திற்காக அரசனும் அவனுடைய தோழனாவான்.* கெட்டழிந்தவர்களுக்கும் நம்பாவதர்களுக்கும் எதுவுமே தூய்மையில்லை. அவர்களுடைய அறிவும் மனச்சாட்சியும் கறை படிந்திருக்கிறது.* அக்கிரமக்காரர் எதிர்பார்ப்பது அழிந்தே போகும். நேர்மையானவனோ இடுக்கண்ணிலிருந்து விடுவிக்கப்படுவான். - பைபிள் பொன்மொழிகள்