மனைவியை நேசியுங்கள்
UPDATED : டிச 11, 2012 | ADDED : டிச 11, 2012
* திடீர் என்று எந்த மனிதன் மீதும் கை வைத்து விடாதே. மற்றவனின் பாவத்திற்கு நீ பங்காளியாகவும் ஆகாதே. உன்னைத் தூயவனாகக் காப்பாற்றிக் கொள். * எவரும் பின் தொடரும் முன்பே தீயவர்கள் பறந்தோடுகிறார்கள். ஆனால் நேர்மையாளர்களோ இளஞ்சிங்கம் போல துணிச்சல் உள்ளவர்களாய் இருக்கிறார்கள்.* முகத்தோற்றத்தைக் கொண்டு முடிவு செய்யாதே. நேர்மையான நியாயத்தைப் பார்த்துத் தீர்ப்புச் சொல்.* மனிதர்களே! நீங்கள் சகோதரர்களாக இருக்கிறீர்கள். ஒருவருக்கொருவர் ஏன் தீங்கு செய்து கொள்ளுகிறீர்கள்?* தீயதை நல்லதென்றும், நல்லதைத் தீயதென்றும் சொல்லுபவர்களுக்குத் துயரம் தான் மிஞ்சும்.* உங்களில் குறிப்பாக ஒவ்வொருவனும் தன் மனைவியைத் தன்னைப் போலவே காதலிப்பானாக. மனைவியோ தன் கணவனை மதித்துப் போற்றுவாளாக.* நாம் இருக்கிற இடமே நமக்கு நல்லது.- பைபிள் பொன்மொழிகள்