உள்ளூர் செய்திகள்

ஓடினாலும் களைப்பு வராது

* சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள், ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியதாகும்.* மனித ஞானத்தைவிட கடவுளின் மடமை ஞானமிக்கது. மனித வலிமையை விட, அவருடைய வலுவின்மை வலிமைமிக்கது.* கடவுள் மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் புதிய ஆற்றலை பெறுவர். அவர்கள் ஓடுவர், களைப்படையார், நடந்து செல்வர், சோர்வடையார்.* நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய். அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய்.* உங்களுக்குள் ஒருவருக்கொருவர் மட்டுமின்றி அனைவருக்கும், எப்போதும் நன்மை செய்யவே விரும்புங்கள்.* ஒரே எண்ணமும், ஒரே அன்பும், ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து, ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள்.* கடவுளிடம் அன்பு செலுத்துவோர், தம் சகோதர சகோதரிகளிடமும் அன்பு செலுத்தட்டும்.* அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைத்த வாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்.- பைபிள் பொன்மொழிகள்