மிருதுவாகப் பேசுங்கள்!
* எந்த விஷயத்திலும் தெய்வீகமே பலனுள்ளது. இப்போதைய வாழ்விற்கும் இனி வரப்போகும் வாழ்விற்கும் உறுதி தருவதாகும். * தானியத்தைப் பதுக்கி வைப்பவனைப் பொதுஜனம் சபிக்கும். ஆனால், அதை விற்பவன் தலையையோ வாழ்த்தும்.* மிருதுவான பதில் சினத்தை மாற்றிவிடும். புண்படுத்தும் வார்த்தைகளோ ஆத்திரத்தைத்தான் கிளப்பிவிடும்.* முட்டாளுக்கு அவனது புத்தியீனத்திற்கு ஏற்ப பதில் சொல். பதில் சொல்லாவிட்டால், அவன் தன்னை அறிவாளி என்று நம்பிக் கொண்டிருப்பான்.* பணம் படைத்தவன் கடவுளின் ராஜ்யத்திற்குள் நுழைவதை விட, ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழைவது அதிகச் சுலபம்.* பணத்தாசை பிடித்தவர்கள் ஆசைத் தூண்டுதல்களிலும், சூழ்ச்சி வலைகளிலும் விழுகிறார்கள். * கடவுளின் கருணையை உன் பணத்தால் விலைக்கு வாங்கி விடலாம் என்று நீ நினைத்த படியால் உன்னுடைய பணம் உன்னுடனே அழிந்து போகட்டும்.- பைபிள் பொன்மொழிகள்