உள்ளூர் செய்திகள்

சத்தியத்தைக் கடைபிடியுங்க!

* நடக்க வேண்டிய வழியில் குழந்தையை பழக்கினால் வயதான பிறகும் அந்த வழியிலிருந்து விலகாமலிருப்பான்.* பாலைக் கடைந்தால் வெண்ணெய் பிறக்கும். மூக்கைப் பிசைந்தால் ரத்தம் பிறக்கும். கோபத்தை வலியுறுத்தினால் சண்டை தான் பிறக்கும்.* பாவம் செய்யாமல் கோபப்படுங்கள். உங்கள் கோபத்தின் மீது சூரியன் கீழே இறங்கி விடாதிருக்கட்டும்.* கொலை செய்யாதே; களவு செய்யாதே; பொய் சாட்சி சொல்லாதே; வஞ்சனை செய்யாதே; உன் தந்தையையும் தாயையும் பெருமைப்படுத்து.* சஞ்சலமுள்ளவன் காற்றடிக்கும் திசையெல்லாம் இழுத்து அலைக்கழிக்கப்படும் கடல் அலை போல இருக்கிறான்.* சத்தியத்திற்குச் சாட்சியாகவே பிறந்தேன். அதற்காகவே உலகிற்கு வந்தேன். சத்தியத்தைக் கடைபிடிப்பவன் எவனும் என் குரலுக்குக் காது கொடுக்கிறான்.* சச்சரவிலிருந்து விலகி நிற்பது மனிதனுக்கு மேன்மை. ஆனால், ஒவ்வொரு முட்டாளும் எந்தச் சண்டையிலும் தலையிட்டுக் கொண்டேயிருப்பான்.- பைபிள் பொன்மொழிகள்