நன்றி சொல்வோம்
UPDATED : டிச 31, 2011 | ADDED : டிச 31, 2011
* நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய்; அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய்.* கடவுளே உங்களுள் செயலாற்றுகிறார், அவரே தமது திருவுளப்படி நீங்கள் செயற்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார்.* இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் இறை மக்களுக்கான ஒளிமயமான உரிமைப் பேற்றில் பங்குபெற உங்களைத் தகுதியுள்ளவர்களாக்கிஉள்ளார்.* மனவலிமை கொண்டவர்களாகிய நாம் வலுவற்றவர்களின் குறைபாடுகளைத் தாங்கிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.* நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்.* கருணை நிறைந்தவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பர்; அவரே ஆசி பெற்றவராகிறார்.* நண்பர் கொடுக்கும் அடிகள் நல்நோக்கம் கொண்டவை, பகைவர் தரும் முத்தங்களோ வெறும் முத்தப்பொழிவே.- பைபிள்