இறைவன் எதை விரும்புகிறார்?
* அன்பு பொறுமையுள்ளது, நன்மை செய்யும், பொறாமைப்படாது, தற்புகழ்ச்சி கொள்ளாது, இறுமாப்பு அடையாது.* அறிவிலும் அனைத்தையும் உய்த்துணரும் பண்பிலும் மேன்மேலும் வளர்ந்து, அன்பால் நிறைந்து, சிறந்தவற்றையே ஏற்று செயல்படுமாறு இறைவனை வேண்டுகிறேன்.* அன்பர்களே! ஒருவர் மற்றவர்களிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. * நாம் வாழ்வு பெறும் பொருட்டு, கடவுள் தமது ஒரே மகனை உலகுக்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம் மீது வைத்த அன்பு வெளிப்பட்டது.* இறைவன் நீதியையும், நேர்மையையும் விரும்புகின்றார், அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. * இறைவனின் வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது. நாம் அவரோடு இணைந்திருக்கிறோம் என அதனால் அறிந்து கொள்ளலாம்.* இறைவனின் அருளாலேயே நம்பிக்கையின் வழியாக மீட்கப்பட்டிருக்கிறீர்கள், இது உங்கள் செயல் அல்ல, மாறாக கடவுளின் கொடையாகும்.- பைபிள்