உள்ளூர் செய்திகள்

அன்றாடவாழ்வில் அத்வைதம்

* மனிதர்களாகிய நமக்கு அத்வைதம் என்ற அனுபவம் கிடைக்காததால் வருந்துவதில்லை. ஆனால், நம்முடைய அன்றாட வாழ்க்கையிலேயே அத்வைத உணர்வு இருக்கிறது. ஆனால் அதை நாம் அத்வைதம் என்று உணர்ந்து கொள்ளாமல் தவிக்கிறோம்.
* மகாராஜா அரண்மனையில் வசதிகளுடன் தூங்குகிறார். பிச்சைக்காரன் மண் தரையில் அப்படியே படுத்துத் தூங்குகிறான். தூங்கும்வரையில் இருவருக்கும் அவரவர் வசதிவாய்ப்புகள், சூழ்நிலைகள் குறுக்கிடுகின்றன.
* தூங்கத் தொடங்கி விட்டாலோ இருவரும் அனுபவிக்கும் நிலை ஒன்று தானே! இடம், நேரம், மனநிலைகள் எல்லாமே மறைந்து விடுகின்றன. தூக்கத்தில் ஆண்டி தன்னை தாழ்வாகவோ, அரசன் தன்னை உயர்வாகவோ எண்ணுவதற்கு இடமில்லை.
* ஒன்றை நாம் விரும்பித் தேடும்போது, வேண்டும் ஒருவனுக்கு அவன் நாடும் இன்னொன்றுமாக இரண்டு கிடைக்கின்றன. அந்த நிலையில் மகிழ்ச்சியும், நிறைவும் உண்டாகின்றன. இதுவே அத்வைதத்தின் அடிப்படை.
* நாம் வேறு, நம்முடைய அனுபவம் வேறு என்று இரண்டாகப் பிரிந்த நிலையில் நமக்கு மகிழ்ச்சி உண்டாவதில்லை. அத்வைத நிலையில் உணர்பவரும், உணர்வதும் வேறுவேறாக இல்லாமல் இரண்டுநிலையும் ஒன்றாகி விடுகிறது. ஆழமான அமைதியான ஆனந்தமான ஒன்றிய நிலையே அத்வைதம். அதையே நாம் அன்றாடம் தூக்கத்தில் அனுபவிக்கிறோம்.
தயானந்த சரஸ்வதி