திருப்தி விலைக்கு கிடைக்காது
<P>* அறம் என்னும் நீரில் நீராடி, வாய்மை என்ற வாசனைத் திரவியத்தை பூசிக் கொள்ளுங்கள். அப்போது உங்கள் முகம் பேரொளியால் பிரகாசம் பெற்று விளங்கும்.<P>* இறைவன் நம் அறிவுக்கும் ஆற்றலுக்கும் எட்டாதவன். முடிவில்லாத பெருமையைக் கொண்டவன். மனம்,வாக்கு,காயத்தால் அறிய இயலாதவன். அவனே நமக்கு அருள் செய்வதற்காக தன்னைக் குறைத்துக் கொள்கிறான்.<P>* வாய்மை, நீதி தவறாத முறையில் உணவைத் தேடுதல், இறைவனின் பெயரால் தானம் செய்தல், மனத்தூய்மைக்கு முயற்சித்தல், கடவுளை வணங்குதல் ஆகிய ஐந்திற்காகவும் கடவுளை நாளும் பிரார்த்தனை செய்ய வேண்டும். <P>* ஒவ்வொருவரும் இறைவனின் பெயரை உச்சரிக்கவே செய்கிறார்கள். ஆனால் மனத்தூய்மை இல்லாமல் உச்சரிப்பதால் மட்டும் இறைவனை அடைய இயலாது.<P>* நம் மனம் மதம் பிடித்த யானையைப் போன்றது. பந்த பாசங்களினாலும், மரண பயத்தினாலும் உயிர் அலைந்து திரிகிறது. இதிலிருந்து விடுபட இறையருள் ஒன்றே நமக்குத் துணை செய்யும். <P>* சாம்ராஜ்யம், செல்வம், அழகு, பெருமை, இளமை இவை ஐந்தும் உயிர் இறை ஞானம் பெற விடமால் தடுக்கும் திருடர்கள் ஆவர்.</P><P>* உலகத்தின் செல்வம் முழுவதையும் செலவழித்தாலும் திருப்தியை விலைக்கு வாங்க முடியாது. <BR><STRONG>-குருநானக்</STRONG> </P>