எப்போதும் வேலை செய்!
UPDATED : ஜூலை 31, 2014 | ADDED : ஜூலை 31, 2014
* உண்மையைப் போன்ற தவம் இல்லை. பொய்யைப் போல பாவம் இல்லை.* கடவுளை நம்பிக்கையோடு வழிபடு. எல்லா நன்மையும் உனக்கு அடிமைப்பெண்ணாக காத்து நிற்கும்.* கடவுளை நம்பாவிட்டால், தெய்வத்தன்மை கொண்ட மனிதர்களையாவது நம்பு.* சுடுசொற்கள் அம்பு போன்றவை. அவை காது வழியாகச் சென்று உடல் முழுவதையும் குத்தி ரணப்படுத்துகின்றன.* எப்போதும் வேலையில் ஈடுபடு. ஆனால், எல்லா வேலையில் இருந்து விலகி நிற்கவும் பழகிக்கொள்.- கபீர்தாசர்