உள்ளூர் செய்திகள்

கடவுளைப் புறக்கணிப்பவர் யார்?

* சேவல் காலையில் கூவுவதை விடுவதில்லை. நாய் குரைத்து வீட்டைக் காப்பதை விடுவதில்லை. பசு இனிய பாலைக் கொடுக்கத் தவறுவதில்லை. மனிதன் மட்டும் தர்மத்தை விட்டுவிடத் துணிவது ஏனோ?

* ஜீவகாருண்யத்தை உயிராகக் கொண்டிருப்பவனின் எதிரில் இம்சை நடைபெறாது. அக்கால முனிவர்களின் முன்னிலையில் புலியும்,மாடும் கூட விரோதமின்றி இருந்தன.
* நெற்றியில் நாமம் போன்ற அடையாளமிட்டுக்கொள்வது போன்ற புறசின்னங்களைக் காட்டிலும், சத்தியம், அகிம்சை, பொறுமை போன்ற அகச்சின்னங்களே ஆன்மிகத்திற்கு அவசியமானவை.
* பலவிதமான மணங்களையும், நிறங்களையும் கொண்ட மலர்களில் இருந்து ஒரே விதமான தேன் கிடைப்பது போல, மக்களிடம் பலவிதமான வழிபாட்டு முறைகள் இருந்தாலும் யாவரிடமும் இருக்கும் கடவுள் உணர்வு ஒன்றே.
* சத்தியத்தை யார் ஒருவன் புறக்கணிக்கின்றானோ அவன் உண்மையான கடவுளையே புறக்கணித்தவன் ஆகிறான்.
* அழகிருந்தும் கண்பார்வை இல்லை என்றால் உலகில் வாழ்வதில் பயனில்லை. அதுபோல, நம்மிடம் இருக்கும் பணத்தால் தானதர்மங்கள் செய்யாவிட்டால் எந்தப் பயனும் இல்லை.
-கிருஷ்ணப்ரேமி சுவாமி