இவர்கள் முன் கால்நீட்டாதீர்!

*கடவுளின் பக்தர்களுக்குப் பணிபுரிவதால் தான் கடவுளை அடைய முடியும் என்பதை உங்கள் இருதயத்தில் நிறுத்திக் கொள்ளவேண்டும்.
* கடவுளுடைய பக்தர்களுக்குப் பணி செய்யத் தன்னையே எவன் தியாகம் செய்யாமல் இருக்கிறானோ, அவன் சிறந்தவனாக இருந்தாலும் அழிந்து விடுவான்.
* தன் உறவினர்களை எப்படி நேசிக்கிறீர்களோ அவ்வாறே கடவுளின் பக்தர்களைப் பாடி மகிழ வேண்டும்.
* காலையில் எழும்போது ஆன்மிகச் சொற்களை உச்சரித்துப் பழக வேண்டும்.
* கடவுளுக்கு முன்னால், ஆசிரியருக்கு முன்னால், கடவுளின் பக்தனுக்கு முன்னால் காலை நீட்டித் தூங்குதல் கூடாது.
* கோயில், விமானம், கோபுரம் ஆகியவற்றைக் கண்டதும் மரியாதையுடன் தலைவணங்குதல் வேண்டும்.
* ஒருவனுடைய பிறப்பைப் பற்றியோ, தொழிலைப் பற்றியோ எண்ணாமல் அவனுடைய கொள்கைகளைப் பின்பற்றி பணிவிடை செய்வதே மேலானதாகும்.
* நல்ல ஒழுக்கமும், உயர்ந்த பக்தியும் கொண்டவர்களிடம் இருந்து மட்டும் உணவைப் பெற்று மகிழுங்கள்.
ஒரு கடவுள் வணக்கமே மேலானது.
-ராமானுஜர்