எல்லாம் நன்மைக்கே!
UPDATED : மார் 20, 2014 | ADDED : மார் 20, 2014
* வறியவருக்கு உதவும் அதே சமயத்தில் அதைப் போக்கும் முயற்சியிலும் ஈடுபாடு கொள்ள வேண்டும்.* தோல்வி என்பதற்கு, ஒரு மனிதன் லட்சியத்தை அடைய கடவுள் சுற்றி வளைத்து கூட்டிச் செல்கிறார் என்றே பொருள்.* பகைவன் உன்னைத் தாக்கும்போதும், அவனுள் இருக்கும் கடவுள் மீது அன்பு செலுத்து.* கடவுளின் அரசாட்சியில் தீமையே கிடையாது. எல்லாமே நன்மைக்கான ஏற்பாடு மட்டுமே.* பயனற்ற இன்ப கற்பனைகளில் மூழ்கிக் கிடக்காதே. விழிப்புடன் உலகத்தைப் பார்க்கக் கற்றுக் கொள்.- அரவிந்தர்