குறையும் நிறையாகும்
UPDATED : ஜூன் 20, 2014 | ADDED : ஜூன் 20, 2014
* அடுத்தவரை அண்டிப் பிழைப்பு நடத்தும் வரை துன்பம் நம்மை விட்டு நீங்காது. * அன்புடையவராக இருக்கும் கடவுளே, கொடியவராக இருந்து தண்டிக்கவும் செய்கிறார். * கடவுளின் பாதையில் நடை போட்டால் குறைகள் நீங்கி வாழ்வில் நிறைவுண்டாகும். * கடவுளின் ஏவலனாக இருப்பதை விட, அவருக்கு அடிமையாக இருப்பதே சிறந்தது. * தன்னை புண்படுத்தியவர்களையும் மன்னிக்கும் மனப்பக்குவத்தின் பெயரே பெருந்தன்மை. - அரவிந்தர்