உள்ளூர் செய்திகள்

உன்னை நீயே ஆய்வு செய்!

* செய்யும் செயல்களை எல்லாம் கடவுளுக்கு செய்யும் செயல்களாகக் கருதி செயல்படுபவர்களின் மனம் கோயில். அங்கு எப்போதும் அமைதியும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும். * ஆற்றலைப் பெற வேண்டுமானால், மனதில் எப்போதும் ஆற்றலைப் பற்றிய எண்ணமே இருக்க வேண்டும். எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் ஆற்றல் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும். * உன்னை நீயே இரக்கமின்றி ஆய்ந்து பார்ப்பாயாக. உன் தவறுகள் கண்ணுக்குப் புலப்படும். அப்போது நீ பிறரிடம் பரிவோடும், இரக்கத்தோடும் நடந்து கொள்வாய்.* தனிமையை விரும்புவது அறிவைத் தேடுவதற்கான அறிகுறி. ஆனால், கூட்டத்தின் மத்தியிலும், போர்க்களத்திலும், கடை வீதியிலும் தொடர்ந்து தனிமையை விட்டு விலகாமல் இருக்கவும் கற்றுக் கொள்ளவேண்டும். * துன்பம் நம்மைத் தகுதி உடையவராக மாற்றுகிறது. வேதனையே வலிமையின் கதவுகளைத் திறக்கும் திறவுகோல். - அரவிந்தர்