உள்ளூர் செய்திகள்

உங்கள் தியாகம் எப்படி?

* வறுமையை மட்டும் ஒழித்து விட்டால் சமுதாயத்தில் தீமை தீர்ந்து விடும் என்று நினைப்பது அறிவீனம். * மனிதனுடைய பயணத்தின் லட்சியம் எல்லைக்கு அப்பாற்பட்ட தெய்வீக நிலையாகும். முழுமையான அந்த நிலையில் தீமை என்பதே சிறிதும் இல்லை.* கடவுள் மனிதனை வழி நடத்துகிறார். மனிதனோ தன்னைத் தவறான வழியில் செலுத்திக் கொண்டிருக்கிறான்.* உயிர்களின் மீது இரக்கம் கொள்வது நல்லது தான் என்றாலும், இரக்கத்திற்கு அடிமையாவது நல்லதன்று.* வெறுப்பு சக்தி மிக்க வாள் போன்றது. ஆனால், அது இருபுறமும் வெட்டும் தன்மை கொண்டது.* வாழ்வில் தியாகத்திற்காக தியாகம் செய்வது கூடாது. கடவுளுக்காகவும், மனித குலத்திற்காகவும் தியாகம் அமைய வேண்டும். * மற்றவர்களின் புகழ்ச்சிக்காக நற்குணத்தைப் பின்பற்ற வேண்டாம். - அரவிந்தர்