உள்ளூர் செய்திகள்

நல்ல எண்ணங்கள் வளரட்டும்

* கடவுள் முன் நாம் அற்பமானவர்கள். இதனால், மனிதன் அகந்தை கொள்வது சிறிதும் நியாயம் இல்லை.* கல்லில் கடவுளைத் தேடுவதில் பயன் இல்லை. உயிர்களில் எல்லாம் நிறைந்துஇருக்கின்ற கடவுளைத் தேடுங்கள்.* தீயவர்களிடமும் நல்லது இருக்கிறது. ஒழுக்க சீலரிடமும் தவறு இருக்கிறது. இதில் வியப்பதற்கோ, திகைப்பதற்கோ ஏதுமில்லை.* உடம்பை நோயற்றதாக ஆக்க முடியும் என்பது சாத்தியமானது என்றால், சமுதாயத்தை வறுமையற்றதாக ஆக்குவதும் சாத்தியம் தான்.* அன்பும், சக்தியும் இணைந்தால் தான் உலகைக் காப்பாற்ற முடியும். அவை தனித்தனியே இருந்தால் உலகைக் காப்பாற்ற முடியாது.* தீய எண்ணங்களை நல்ல எண்ணங்களாக மாற்றுங்கள். செய்யும் செயல்களை வேள்வி ஆக்குங்கள். - அரவிந்தர்