அமைதி நிலைக்கட்டும்!
UPDATED : பிப் 20, 2014 | ADDED : பிப் 20, 2014
* எதைச் செய்தாலும் இறைவனுக்கு அர்ப்பணிக்கும் உணர்வோடு செய். * கடவுளுக்கு அடிமையாக இருப்பதே மகிழ்ச்சியானது. அவனை மறந்து விட்ட நிலையில் வாழ்வது, நரகத்தை விடக் கொடுமையானது.* உன் மனதின் மீது வேண்டுமானால் சந்தேகம் இருக்கலாம். ஆனால், கடவுளின் வழிநடத்துதலில் சிறிதும் சந்தேகம் கூடாது.* மனதில் எப்போதும் அமைதியும், சந்தோஷமும் நிறைந்திருக்கட்டும். அமைதியே அகவாழ்வையும், புறவாழ்வையும் இணைக்க வல்லது.- அரவிந்தர்