உள்ளூர் செய்திகள்

அன்புக்கு இரண்டு வேலை

* அன்பு அரவணைப்பதற்காக மட்டுமல்ல. தண்டிக்கவும் அதையே பயன்படுத்த வேண்டும்.* துன்பத்திற்காக வருந்த வேண்டாம். அதை தொடர்ந்து நன்மையும் உங்களைத் தேடி வரத் தான் போகிறது.* அழிவில் இருந்து மனிதனைக் காக்கும் தன்மை அன்பு, வீரம் இரண்டிற்கும் இருக்கிறது. * தீய எண்ணங்களை நல்ல எண்ணங்களாக மாற்றுங்கள். தீய சொற்களை நல்ல சொற்களாக மாற்றுங்கள்.* மூளையைக் கொண்டு இறைவனைப் புரிந்து கொள்ள முடியாது. அவர் இதயத்தோடு மட்டுமே பேசுகிறார்.- அரவிந்தர்