உள்ளூர் செய்திகள்

நிகழ்காலம் தான் முக்கியம்

* பக்தி ஒருபோதும் நம்மைக் கைவிடுவதுஇல்லை. இறைவன் மீது ஆழமான நம்பிக்கை வைக்கும் போது தான் மனம் வலிமை பெறுகிறது. * துன்பம் நேருமானால் இறைவன் அளித்த வரமாகக் கருது. அது அப்படியே வரமாக மாறிவிடும்.* இறையருள் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. நேர்மையுடன் இருக்கும்போதே நம்மால் அதை உணர முடியும். * கடந்ததைப் பற்றி வருந்தாதே. வருவதைப் பற்றிக் கற்பனையும் செய்யாதே. நிகழ்காலம் ஒன்றே முக்கியமானது. * விழிப்புடன் இருந்தால் காலம் சிறிதும் விரயமாவதுஇல்லை. ஆண்டுக்கணக்காகச் செய்யும் பணியைக் கூட மாதக்கணக்கில் செய்து விட முடியும். விழிப்புடன் இருப்பவன் குறிக்கோளை நோக்கி விரைவாக முன்னேறுகிறான். * இறைபக்தியும், நம்பிக்கையும் மட்டும் தான் உனக்குக் கிடைக்கும் உண்மையான உதவி. அது தான் உண்மையான மகிழ்ச்சியும் கூட.- ஸ்ரீ அன்னை