உள்ளூர் செய்திகள்

நல்லதைப் பேசுவோம்

* கடவுளின் படைப்பில் அற்பமானது என்று ஏதுமில்லை.* நோயால் உடல்நலம் குன்றுவது போல, தீய எண்ணங்களால் மனநலமும் குன்றி விடுகிறது.* நல்லோருக்கு சேவை செய்வதன் மூலம் வாழ்வில் எல்லா இன்பங்களையும் பெற்று வாழலாம்.* மனிதன் தன்னைத் தானே சிறைப்படுத்திக் கொண்டு வாழ்கிறான். இதிலிருந்து மீள கடவுளே வழிகாட்ட வேண்டும்.* பிறருடைய குறைகளைப் பற்றி சிந்திக்க வேண்டாம். நல்லதை மட்டுமே எப்போதும் பேசுங்கள்.- தாயுமானவர்