சுவனம் செல்ல விரும்பினால்...
UPDATED : மே 02, 2023 | ADDED : மே 02, 2023
மனிதன் நீண்ட ஆயுளையும், நிறைவான வளமும் பெற்று வாழ விரும்பினால், உறவுகளை அரவணைக்க வேண்டும். இவர்களே ஒருவரது வாழ்க்கையை தாங்கி நிற்கும் வேர்களாகவும், ஆதாரமாகவும் விளங்குகிறார்கள். மதீனாவுக்கு சென்ற நபிகள் நாயகம், நிகழ்த்திய முதல் சொற்பொழிவில் இதைப்பற்றி கூறியுள்ளார். * மக்களே! அமைதியை பரப்புங்கள். * பசித்தவருக்கு உணவு கொடுங்கள். * உறவுகளை இணைத்துக் கொள்ளுங்கள். * மக்கள் உறங்கும் வேளையில் இறைவனை வணங்குங்கள். சுவனம் புகுவீர்கள்.