கண்ணியத்திற்கு உரியவர்கள்
UPDATED : மே 22, 2023 | ADDED : மே 22, 2023
* வசதி படைத்தவர் பிறருக்கு உதவ வேண்டும். அவரே கண்ணியத்திற்கு உரியவர். * இடது கரத்தால் எதையும் வாங்கவோ, கொடுக்கவோ வேண்டாம். * உங்களிடம் நல்ல குணம் இருந்தால் வெற்றி உண்டு. தீய குணம் இருந்தால் தோல்வி உண்டு. * பிறர் கஷ்டப்படுவதை பார்த்து சிரிக்காதீர். * தண்ணீர், நெருப்பு, மேய்ச்சல் நிலம் ஆகியவை அனைவருக்கும் பொதுவானது. * ஒரு பயணியை போன்று இந்த உலகில் வாழுங்கள். * பிரச்னை தரும் எந்தப் பேச்சையும் பேசாதீர்கள். * துன்பத்தில் இருக்கும்போது பொறுமையாக இருப்பதுதான் சிறந்தது.-பொன்மொழிகள்