உள்ளூர் செய்திகள்

வாய்ப்பே இல்லை

மெக்காவிற்கு வந்து ஹஜ் கடமையில் ஈடுபட்டிருந்தார் நபி ஹஜ்ரத் ஹூத். அப்போது உயிரைக் கைப்பற்றும் வானவரான மலக்குல் மவுத் மனித உருவில் அவர் முன் தோன்றினார். தன் கையில் அழகான ஆடைகளை வைத்திருந்தார். அதைக் கண்ட ஹஜ்ரத் ஹூத் ஆடை குறித்து பாராட்டினார். ''இந்த ஆடைகளில் உங்களுக்கு விருப்பமானதை அணிந்து கொள்ளுங்கள்'' என்றார் மவுத். அவரும் பிடித்ததை அணிந்து கொண்டார். ''நீங்கள் அணிந்துள்ள ஆடை உங்களுக்குரிய 'கபன்'. இறைவனின் ஆணைப்படி உங்கள் உயிரைக் கைப்பற்ற நான் வந்துள்ளேன்'' என்றார் மவுத். (கபன் என்பது வெண்ணிற ஆடை. புதைக்கும் போது பயன்படுத்துவது)''அப்படியா... ரொம்ப சந்தோஷம். ஆனால் சிறிது நேரம் பொறுங்கள். மனைவி, குழந்தைகளிடம் சொல்லிவிட்டு வருகிறேன்'' என்றார். ''அதற்கு வாய்ப்பே கிடையாது. இந்த இடத்தை விட்டு ஓரடி கூட நகர முடியாது. அது அவனது ஆணை'' என உயிரை பறித்தார். அந்நேரத்தில் வானவரான ஹஜ்ரத் ஜிப்ரீல் சுவர்க்கத்தில் இருந்து வாசனைத் திரவியத்தைக் கொண்டு வந்தார். பிறகு ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.