அதிசய ஒட்டகம்
ஹஜ்ரத் நுாஹ் தலைமுறையில் ஐந்தாவதாக வந்தவர் ஹஜ்ரத் ஸாலிஹ் நபி. கம்பீரமான தோற்றம் கொண்ட இவர், வெள்ளையும், சிவப்பும் கலந்த ரோஜா நிறத்தில் அழகாக இருப்பார். ஸமூது சமுதாயத்தினருக்கு நல்வழி காட்டுவதற்காக இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டவர் இவர். மலைகளை குடைந்து அதில் தங்கும் பழக்கம் கொண்ட இந்தச் சமுதாயத்தினர் ஹிஜாஸுக்கும் சிரியாவுக்கும் நடுவில் வாழ்ந்தனர். இவர்கள் ஸாலிஹ்ைஹ நபியாக ஏற்கவில்லை. அவருக்கு இடையூறு பல செய்தனர். ஸமூது சமுதாயத்தின் தலைவர் குறிப்பிட்ட ஒரு குன்றை காட்டி, ''இதில் இருந்து ஒட்டகம் ஒன்றை வரவழைத்துக் காட்டுங்கள். அது பெண் ஒட்டகமாகவும், நிறைமாத கர்ப்பிணியாகவும் இருக்க வேண்டும். அதன் நெற்றி கறுப்பாகவும், உடலின் ரோமம் வெள்ளையாகவும் இருக்க வேண்டும். அது வெளியே வந்ததும் குட்டியை ஈன்று விட வேண்டும். இப்படி நடந்தால் மட்டுமே உம்மை நபியாக ஏற்போம்'' என நிபந்தனை விதித்தார். அவரும் இறையருளால் நிகழ்த்திக் காட்டினார். அப்போது 'உங்களை உலகிற்கு அனுப்புவதற்கு நாலாயிரம் ஆண்டுக்கு முன்பே அந்த ஒட்டகத்தை படைத்து இந்தக் குன்றுக்குள் வைத்தோம். அதன் பாலை மட்டும் அனைவரும் குடிக்கலாம். ஆனால் அதை கொல்லாதீர்கள்' என இறைவனிடம் இருந்து அறிவிப்பு வந்தது.