உண்மையை விட்டு விலகாதே
UPDATED : ஏப் 19, 2019 | ADDED : ஏப் 19, 2019
பொய் பேசுவதில் வல்லவர்களாக உள்ளனர் மக்கள். உண்மை எப்போதாவது ஒருமுறை தான் வாயிலிருந்து உதிர்கிறது. இது குறித்து கேட்ட போது, “பொய் பேசுவோரைக் கண்டால் இறைவன் வருந்துவான். உண்மை பேசுபவர்களைக் கண்டால் அவனுக்கு ஆனந்தம் பெருகும். உண்மை பளுவானது. அதனால் தான் அதை சுமப்பவர் சிலராக இருக்கின்றனர். உலக விவகாரங்களில் உண்மையாக நடந்து கொண்டாயா என்பதே இறந்தபின் நம்மிடம் இறைவன் கேட்கும் கேள்வி. உண்மையை விட்டு விலகாதே” என்கிறார் நாயகம்.