இது போதும் நமக்கு
UPDATED : பிப் 18, 2011 | ADDED : பிப் 18, 2011
எவையெல்லாம் போதும் என்று கேட்டால், 'இவைகளே போதும்' என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.* எவர் ஒருவர் நண்பரைத் தேடி அலைகின்றாரோ அவருக்கு அல்லாஹ் போதுமானவன்.* எவர் ஒருவர் வழிகாட்டியைத் தேடி அலைகின்றாரோ அவருக்கு அல்குர்ஆன் போதுமானது.* எவர் ஒரு உபதேசியைத் தேடி அலைகின்றாரோ அவருக்கு மரணம் போதுமானதாகும்.* எவர் பணத்தைத் தேடி அலைகின்றாரோ அவருக்கு போதுமென்ற மனம் போதுமானது.* எவர் இந்த நான்கிலும் படிப்பினை பெறவில்லையோ, அவருக்கு நரகம் போதுமானது.