உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / குருபெயர்ச்சி பலன்கள்

குருபெயர்ச்சி பலன்கள் கடகம்

கடகம்கடகம்புனர்பூசம் 4: நினைப்பது நடந்தேறும்ஞானக்காரகனான குரு பகவானை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2,3ம் பாதங்களான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும், 4ம் பாதமான கடகத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் ராசிநாதனாகவும் உள்ளனர். சாதுரியமாக செயல்பட்டு சாதித்திடக்கூடிய நீங்கள் பிறருக்கு வழிகாட்டுபவர்களாகவும் இருப்பீர்கள்.புனர்பூசம் 1,2,3ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 2 ம் வீடான தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரித்து, அக். 20 ல் அதிசாரமாக உங்கள் ராசிக்கு 3 ம் வீட்டில் சஞ்சரிக்கும் குருவால், மே 26 முதல் உங்கள் வாழ்க்கை வளமாகும். தொட்டதெல்லாம் துலங்கும். நினைத்ததெல்லாம் நடந்தேறும். சோர்ந்து கிடந்தவர்களும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய நிலை உருவாகும். வராமல் இருந்த பணம்வரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைத்தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு தகுதிக்குரிய வேலைக்கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். செல்வாக்கு உயரும். அக். 20 முதல், செய்துவரும் தொழிலில் சின்னச்சின்ன நெருக்கடிகள், தடைகள் ஏற்படும், வேலையில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும், எடுத்த வேலைகளை முடிக்க முடியாமல் போகும். வருமானத்தில் தடையுண்டாகும் என்பது பொதுவிதியாகும். 4 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் ஜென்ம குருவாகவும், அக். 20 முதல் அதிசாரமாக தன குடும்ப வாக்கு ஸ்தானத்திலும் சஞ்சரிப்பவரால் மே 26 முதல்,  பார்த்துவரும் வேலையின் காரணமாக குடும்பம் ஓரிடம், தான் ஓரிடம் என்று வசிக்க வேண்டிய நிலை சிலருக்கு ஏற்படும். எந்த ஒன்றிலும் யோசிக்காமல் செயல்பட்டு சங்கடத்திற்கு ஆளாக நேரும். சிலருக்கு குடும்பத்திலும் நிம்மதி இல்லாமல் போகும். நன்றாகப் பழகி வந்தவர்களும் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று விடுவார்கள். தொழிலிலும் சிலருக்கு பிரச்சனைகள் உண்டாகும். வருமானம் எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்காமல் போகும். அக். 20 முதல் இந்த நிலை மாறும். இழந்த பொருளெல்லாம் கைக்கு வரும். வருமானம் உயரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பொன் பொருள் சேரும். புதிய இடம் வீடு என்ற கனவு நனவாகும். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். ஸம்பத்து தாரையான பூசம் மற்றும் ஷேமத் தாரையான மகத்தில் குரு சஞ்சரிக்கும் காலங்களில் யோகப்பலன்கள் கூடும்.சஞ்சாரம், பார்வை பலன்குரு பகவான் தான் சஞ்சரிக்கும் இடங்களைவிட பார்க்கும் இடங்களை சுபிட்சமாக்கிடக்கூடியவர். 1,2,3 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 6,8,10 ம் இடங்களையும், அக். 20 முதல் 7,9,11 ம் இடங்களையும் குரு பார்ப்பதால், உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். வழக்கு ஜெயமாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். எடுத்த வேலைகள் ஜெயமாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சி மேற்கொண்டவர்களுக்கு வேலைக்கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு ஏற்படும். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவால் எடுக்கும் முயற்சிகள் லாபமாகும். புதிய இடம், வீடு வாங்க முடியும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும். வியாபாரம் மற்றும் தொழிலில் ஆதாயம் கூடும். சேமிப்பு உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். 4ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 5,7,9 ம் இடங்களையும், அக். 20 முதல் 6,8,10 ம் இடங்களையும் குரு பாரப்பதால், குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். சொந்த வீடு, வாகனம், வசதி வாய்ப்பு அந்தஸ்து என்ற கனவு நனவாகும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். எடுத்த வேலைகள் முடியும். அனைத்திற்கும் சூழ்நிலை சாதகமாகும். சொந்த தொழில், சிலருக்கு தகுதியான வேலை அமையும். வியாபாரத்தில் லாபம் கூடும். பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளோர் செல்வாக்கு உயரும்.அஸ்தமனம், வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் சுபப் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். பொதுப்பலன்இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். பணவரவு அதிகரிக்கும். சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.தொழில் தொழில் ஸ்தானத்திற்கும் லாப ஸ்தானத்திற்கும் குருவின் பார்வைகள் கிடைப்பதால் இக்காலம் உங்களுக்கு யோகமான காலமாக இருக்கும். நஷ்டத்தில் இயங்கிய தொழில்களும் லாபமடையும். பணியாளர் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். கவனமாக செயல்பட்டு லாபம் காணக்கூடிய நிலை உருவாகும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி., ஏ.ஐ, அலைபேசி சம்பந்தப்பட்ட தொழில்கள், ஏற்றுமதி இறக்குமதி, பங்கு வர்த்தகம், நிதி நிறுவனம், தொழிற்சாலை, ட்ராவல்ஸ், குடிநீர், விவசாயம் சார்ந்த தொழில்கள், ரியல் எஸ்டேட், அழகு சாதனப் பொருட்கள், கமிஷன் ஏஜென்சி தொழில்கள் வளர்ச்சி அடையும்.பணியாளர்கள் வெளிநாட்டு மோகம் குறையும். வெளிநாட்டில் வேலைப் பார்த்துவரும் சிலர் சொந்த ஊர் நோக்கி வரக்கூடிய நிலை உருவாகும். அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும். சட்ட சிக்கல்கள் முடிவிற்குவரும். எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவு கூடும்.பெண்கள் மனரீதியாக சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். எந்த ஒன்றும் நினைத்தபடி நடக்கவில்லை என்றக் குறை விலகும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என அவரவர் வயதிற்கேற்ற தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். கணவரின் ஆதரவு அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். ஆரோக்கியமாக நடைபோடக்கூடிய நிலை உருவாகும்.கல்வி வெளியில் இருந்து பார்ப்பவர்கள் உங்களைப்பற்றி பல்வேறு முடிவுகளுக்கு வந்தாலும், படிப்பில் அக்கறை கொண்டவர்களாகவே நீங்கள் இருப்பீர்கள். எதிர்காலம் என்பது படிப்பினால்தான் என்பதை உணர்ந்திருக்கும் உங்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். மேல் நிலையில் இருந்து உயர்கல்விக்கு செல்லக்கூடிய நிலை உருவாகும். எதிர்பார்த்த கல்லூரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலைபரம்பரை நோய், தொற்று நோய், பருவ நோய் என்று அவ்வப்போது சங்கடப்பட்டு வந்த உங்களுக்கு இக்காலத்தில் அவற்றிலிருந்து வெளிவரக்கூடிய நிலை உருவாகும். மருத்துவமனைகளுக்கு அடிக்கடி சென்று வந்த நிலை மாறும். மருத்துவச் செலவுகள் குறையும். ஆரோக்கியம் சீராகும்.குடும்பம்குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் பிரச்சனைகள் எல்லாம் விலகும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். விவாகரத்துவரை சென்றவர்களும் பெரியோரின் அறிவுரைகளால் மீண்டும் இணைந்து வாழக்கூடிய நிலை உருவாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழ்ந்திடக் கூடிய நிலை ஏற்படும்.பரிகாரம்: நெல்லையப்பரை வழிபட வேண்டுதல் நிறைவேறும். வாழ்வில் வளம் கூடும்.பூசம்: முயற்சி வெற்றியாகும்மனக்காரகனான சந்திரன், கர்மக்காரகனான சனியின் அம்சத்தில் பிறந்த நீங்கள், தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்டவர்கள். எடுத்த வேலைகளை முடிப்பதில் வல்லமையாளர்கள். உங்களுக்கு குரு பகவான் பாக்யாதிபதி மட்டும் அல்ல உங்கள் ராசிநாதனுக்கும் நட்பானவர். மே 26 முதல் உங்கள் ஜென்ம ராசியில் உச்சமாக சஞ்சரிக்கும் குரு, அக். 20 முதல் உங்கள் ராசிக்கு தன குடும்ப வாக்கு ஸ்தானமான சிம்மத்தில் அதிசாரமாக சஞ்சரிக்கிறார். பொதுவாக, ஜென்ம குரு அலைச்சலை அதிகரிப்பார், பிரிவினையை ஏற்படுத்துவார் என்று கூறப்பட்டாலும் கடகம், தனுசு, மீனம் ராசிக்குள் அவர் சஞ்சரிக்கும் காலங்களில் மட்டும் அந்த ராசியினருக்கு யோகத்தையே ஏற்படுத்துவார். அந்த நிலையில் மே 26 முதல், கடக குருவால் உங்கள் வாழ்க்கை ஏற்றமடையும். எண்ணிய வேலைகள் நடந்தேறும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். அக். 20 முதல் இரண்டாமிடமான சிம்மத்தில் சஞ்சரிக்கும் குருவால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். செய்துவரும் தொழில் லாபம் தரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடன்கள் அடைபடும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும் என்பது பொதுவான விதியாகும். உங்கள் நட்சத்திராதிபதி சனியும், ராசியாதிபதிகள்  சந்திரனும் சூரியனும் குருவிற்கு நட்பானவர்கள் என்பதால் நீங்கள் எடுக்கும் வேலையெல்லாம் இக்காலத்தில் வெற்றியாகும். புனர்பூசம், ஆயில்யம் நட்சத்திரங்களில் குரு சஞ்சரிக்கும் காலங்களில் உங்கள் கனவுகள் எல்லாம் நனவாகும்.சஞ்சாரம், பார்வை பலன்மே 26 அன்று கடகத்தில் சஞ்சரிக்கும் குரு, உங்கள் ராசிக்கு, 5,7,9 ம் இடங்களைப் பார்ப்பதால், பெரியோரின் ஆதரவும் குலதெய்வத்தின் அருளும் ஏற்படும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். குழந்தை பாக்யத்திற்காக தவமிருந்தவர்களுக்கு வரம் கிடைத்ததுபோல் வாரிசு வந்து பிறக்கும். திருமண வயதினருக்கு வரன் வருவதுடன் திருமணமும் நடந்தேறும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். கருத்து வேறுபாட்டால் பிரிந்திருந்தவர்கள் மீண்டும் ஒன்றாக வாழும் நிலை உருவாகும். கூட்டுத்தொழிலில் ஆதாயம் கூடும். சொந்த வீடு, வாகனம் என்ற எண்ணம் நிறைவேறும். அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்தில் சஞ்சரிக்கும் குரு, உங்கள் ராசிக்கு 6,8,10 ம் இடங்களைப் பார்ப்பதால், உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். எதிரிகளின் தொல்லை நீங்கும். இழுபறியாக இருந்த வழக்குகள் முடிவிற்குவரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். தொழில் வளர்ச்சி அடையும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். வேலைக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும். சொந்தத் தொழில் என்ற கனவு நனவாகும்.அஸ்தமனம், வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் சுபப் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். பொதுப்பலன்குரு பகவானின் சஞ்சாரமும் அவருடைய பார்வைகளும் சாதகமாக இருப்பதுடன், பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானையும் குரு பார்ப்பதால் இக்காலம் உங்களுக்கு யோகமான காலமாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். பொருளாதார நிலை உயரும். புதிய தொழில்,  எதிர்பார்த்த வேலை, வசதியான வீடு, என்ற எண்ணமெல்லாம் நிறைவேறும். திருமண வயதினருக்கு திருமணம், சிலருக்கு குழந்தை பாக்யம், பட்டம் பதவி, கௌரவம், அந்தஸ்து என்ற கனவெல்லாம் நனவாகும்.தொழில் மே 26 முதல் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் தொழில்காரகன் சனிக்கும், அக். 20 முதல் தொழில் ஸ்தானத்திற்கும் குருப்பார்வை உண்டாவதால், செய்துவரும் தொழில் வளர்ச்சி அடையும். முடங்கிக்கிடந்த தொழில்கள் இயங்க ஆரம்பிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். இயந்திரத் தொழிற்சாலை, வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு, வாகன விற்பனை, ஐ.டி., ஏ.ஐ, வெளிநாட்டு வர்த்தகம், ஏஜென்சி, டிராவல்ஸ், குடிநீர் சம்பந்தப்பட்ட தொழில்கள், விவசாயம் சார்ந்த தொழில்கள், கால்நடை வளர்ப்பு, பால் வியாபாரம், ஜுவல்லரி தொழில்கள், சட்டம் சார்ந்த தொழில்கள் முன்னேற்றம் அடையும்.பணியாளர்கள்உழைப்பாளர்கள் திறமைக்கு மதிப்புண்டாகும். சிலர் சம்பள உயர்வு மற்றும் சலுகைகளுக்காக தற்போது வேலைப்பார்க்கும் நிறுவனத்தை விட்டுவிட்டு வேறு நிறுவனத்தில் சேர்வீர்கள். வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு வேலையின் மீதிருந்த பயம் போகும். குழப்பம் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.பெண்கள் பெண்களுக்கு இந்தக் குருப் பெயர்ச்சி மிகப்பெரிய யோகப் பலன்களை உண்டாக்கும். உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என அவரவருக்குரிய தேவைகள் பூர்த்தியாகும். வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் போராட்டங்கள் எல்லாம் விலகும். அதிர்ஷ்ட. வாய்ப்புகள் தேடிவரும். உடல்நிலை சீராகும். கணவன் மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உருவாகும். வேலைப்பார்த்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். செல்வாக்கு உயரும்.கல்வி படிப்பில் ஆர்வம் கூடும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி என்ற கனவு நனவாகும். சிலர் மேற்கல்விக்காக வெளிநாடு வெளி மாநிலம் என்றும் செல்வீர்கள்.உடல்நிலைநோய் நொடி மருத்துவச்செலவு என்றிருந்த நிலை மாறும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். ஆரோக்கியம் சீராகும். சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய நிலை உருவாகும்.குடும்பம்வீண் செலவுகள், குடும்பத்தில் நெருக்கடி, எந்த ஒன்றிலும் நிம்மதி இல்லாத நிலை என்று சங்கடப்பட்டு வந்தவர்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி மாற்றத்தை ஏற்படுத்தும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் தோன்றிய நெருக்கடிகள் இருந்த இடம் தெரியாமல் போகும். புதிய இடம் வீடு வாகனம் என்ற கனவுகள் நனவாகும். வீட்டில் மங்கள ஓசை கேட்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர்கள்.பரிகாரம்சொர்ண ஆகர்ஷன பைரவரை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.ஆயில்யம்: வருமானம் அதிகரிக்கும்வித்யாகாரகனான புதன், மனக்காரகனான சந்திரன் அம்சத்தில் பிறந்த நீங்கள், எந்த ஒன்றிலும் திட்டமிட்டு செயல்படக் கூடியவர்கள். பிறரால் சாதிக்க முடியாதவற்றை சாதித்திடக் கூடியவர்கள். எடுத்த வேலைகளை முடிப்பதில் வல்லவரான உங்களுக்கு, உங்கள் நட்சத்திராதிபதி புதனுக்கு குரு பகையானவர் என்றாலும், ராசியாதிபதியான சந்திரனுக்கு நட்பானவர் என்பதுடன் இக்காலத்தில் அவர் சஞ்சரிக்கும் புனர்பூசம், பூசம், மகம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி, நட்பு, அதிநட்பு, ஸாதக தாரைகள் என்பதால்மே 26 முதல் உங்கள் ராசிக்குள் உச்சமாக சஞ்சரிக்கும் காலத்திலும், அக். 20 முதல் உங்கள் ராசிக்கு தன குடும்ப வாக்கு ஸ்தானமான சிம்மத்தில் அதிசாரமாக சஞ்சரிக்கும் காலத்திலும் யோகப்பலன்களையே வழங்குவார்.ஜென்ம குருவின் காலம் அலைச்சலையும் சங்கடத்தையும் போராட்டத்தையும் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் என்றாலும், அவை எல்லாமும் உங்கள் வளர்ச்சிக்கானதாகவும், வசதி வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதற்காகவும், முன்னேற்றத்திற்குமானதாகவே இருக்கும். கடகத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குரு அடி மட்டத்தில் இருப்பவரையும் உச்சத்திற்கு கொண்டு செல்வார். சாதாரணமாக வாழ்ந்தவர்களையும் செல்வாக்கோடு வாழ வைப்பார்.அக். 20 முதல் உங்கள் ராசிக்கு தன குடும்ப வாக்கு ஸ்தானமான, தனக்கு நட்பு வீடான சிம்மத்தில் சஞ்சரிக்கும் குரு, பொருளாதார நிலையை உயர்த்துவார். வசதி வாய்ப்புகளை அதிகரிப்பார். வியாபாரம் தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்துவார். சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். வேலையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சியை வெற்றியாக்குவார். புதிய தொழில் தொடங்க நினைத்தவர்களுக்கு அதற்குரிய வழிகளை அமைத்துக் கொடுப்பார்.சஞ்சாரம், பார்வை பலன்குரு பகவான் சஞ்சரிக்கும் இடத்தைவிட அவர் பார்க்கும் இடங்களை பலப்படுத்துவார் என்பது விதி. மே 26 அன்று கடகத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகள்  உங்கள் ராசிக்கு, 5,7,9 ம் இடங்களுக்கு உண்டாவதால், குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகி மகிழ்ச்சி நிலவும். சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். செய்துவரும் தொழில் விருத்தியாகும். வருமானம் அதிகரிக்கும். ஆடை ஆபரணம் சேரும். எதிர்பாலினரால் மகிழ்ச்சியான நிலை உருவாகும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். திருமண வயதினருக்கு வரன்வரும். எதிர்பாலினரின் ஆதரவு அதிகரிக்கும். அவர்களால் மகிழ்ச்சி உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சியும், பணவரவும் அதிகரிக்கும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். தொழில் லாபம்தரும். மாணவர்களுக்கு உயர்கல்வி கனவு நனவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அதுவும் மனதிற்கு விருப்பமானதாக இருக்கும். புதிய வீட்டில் பால் காய்ச்சிடக்கூடிய நிலை சிலருக்கு ஏற்படும். பழைய வீட்டில் இருந்து வசதியான வீட்டிற்கு மாறிடக்கூடிய நிலை ஒரு சிலருக்கு உருவாகும். சமூகத்தில் மதிப்பும் மரியாதை அதிகரிக்கும். அக். 20 முதல்  சிம்மத்தில் சஞ்சரிக்கும் குரு, உங்கள் ராசிக்கு 6,8,10 ம் இடங்களைப் பார்ப்பதால், நோய் நொடி என்று வாழ்ந்த நிலைமாறும். வீண் செலவுகள் குறையும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். தொழிலில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். விரோதிகள் தொல்லை இருந்த இடம் தெரியாமல் போகும். மனம் உற்சாகம் அடையும். பணவரவு கூடும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். உற்றார் உறவினரின் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். வேலையில் எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். எந்த நேரத்திலும் பயத்தோடு வாழ்ந்து வந்தவர்களுக்கு அதிலிருந்து விடுபடக்கூடிய நிலை உண்டாகும். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் உயரும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு தகுதியான வேலைக்கிடைக்கும்.அஸ்தமனம், வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் சுபப் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். பொதுப்பலன்குரு பகவானின் சஞ்சாரமும் பார்வைகளும் சாதகமாக இருப்பதுடன், உங்கள் தன குடும்பாதிபதி சூரியன் 120 நாட்கள் யோகப்பலன்களை வழங்கிட இருப்பதால், எடுக்கும் வேலைகள் எல்லாம் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். குடும்பம் தொழில் உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். செல்வாக்கு உயரும். புதிய இடம் வீடு வாகனம் ஆடை ஆபரணம் என்ற கனவு நனவாகும் மற்றவர்களுக்கு பயந்து வாழ்ந்து வந்த நிலை மாறும்.தொழில் கடகம் மற்றும் சிம்மத்தில் சஞ்சரிக்கும் குருவின் சஞ்சாரமும் பார்வைகளும் சாதகமாக இருப்பதால்,செய்துவரும் தொழில் முன்னேற்றம்  அடையும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். அரசுவழியில் எதிர்பார்த்த அனுமதிகள் கிடைக்கும். பால் பண்ணை, நிதி நிறுவனம், எக்ஸ்போர்ட், காலண்டர், டைரி, நோட்டுப்புத்தகம் தயாரிப்பு, செய்தித்தாள், ஐ.டி., ஏ.ஐ துறைகள், வெளிநாட்டு வர்த்தகம், குடிநீர் சம்பந்தப்பட்ட தொழில்கள், மினரல் வாட்டர், ஹார்ட்வேர், ஷேர் மார்க்கெட், சின்னத்திரை, வலைதளம், தனியார் கல்வி நிறுவனங்கள் வளர்ச்சி அடையும்.பணியாளர்கள்தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்களுக்கு ஆட்குறைப்பின் காரணமாக வேலையில் ஏற்பட்ட பயம் போகும். உங்கள் திறமையை நிர்வாகம் அறிந்து எதிர்பார்த்த சலுகைகளை வழங்கும். சிலர், பார்க்கும் வேலையை விட்டுவிட்டு வேறு நிறுவனத்திற்கு செல்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் விலகும் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். விரும்பிய மாற்றம் ஏற்படும்.பெண்கள்உடல் நிலையிலும் மனநிலையிலும் பாதிப்பினை சந்தித்து வந்தவர்களின் சங்கடங்கள் விலகும். நீண்டநாள் கனவுகள் நனவாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு உயர்கல்வி எண்ணம் நிறைவேறும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்யம் இல்லாமல் கவலைப்பட்டு வந்தவர்களின் ஏக்கம் தீரும். பிள்ளைகள் நலனில் அக்கறை ஏற்படும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். ஆடை ஆபரணம், வாகனம் சேரும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு கூடும். வேலையில் எதிர்பார்த்த உயர்வு ஏற்படும்.கல்விமாணவர்களுக்கு படிப்பின்மீது அக்கறை அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை உண்டாகும். பொதுத் தேர்விலும், போட்டி தேர்விலும் எதிர்பார்த்த மதிப்பெண் வரும். விரும்பிய கல்லூரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.உடல்நிலைஆயுள்காரகன் சனி பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன், குரு பகவானின் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். விபத்தின் காரணமாக ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறங்கி வந்தவர்களுக்கு ஆரோக்கியம் சீராகும்குடும்பம்நீண்டநாள் முயற்சிகள் வெற்றி அடையும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வீர்கள். குடும்ப நலனிலும் குழந்தைகள் மீதும் அக்கறை அதிகரிக்கும்.  குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். சேமிப்பு அதிகரிக்கும்.பரிகாரம் பூவராகப் பெருமாளை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும். வேண்டுதல் பலிதமாகும்..........


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !