குருபெயர்ச்சி பலன்கள்
குருபெயர்ச்சி பலன்கள் கன்னி
கன்னிகன்னி: உத்திரம் 2, 3, 4: தொழிலில் முன்னேற்றம்ஆத்மக்காரகனான சூரியனை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும், 1 ம் பாதமான சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் ராசி நாதனாகவும், 2,3,4ம் பாதங்களான கன்னியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர். துணிச்சலாகவும், அதே நேரம் திட்டமிட்டும், சூழ்நிலை அறிந்தும் செயல்படக்கூடிய நீங்கள் நினைத்ததை சாதிப்பதில் முதன்மையானவராக இருப்பீர்கள்.உத்திரம் 1 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 12 ம் வீடான விரய ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரித்து, அக். 20 ல் அதிசாரமாக ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் குருவால், மே 26 முதல் வீண் செலவு, அலைச்சல், செய்துவரும் தொழிலில் போராட்டம், பார்த்துவரும் வேலையில் நெருக்கடி, சிலருக்கு விரும்பாத இடத்திற்கு மாற்றம், ஊர்விட்டு ஊர் செல்லும் நிலையினை ஏற்படுத்துவார் என்பது பொது விதியாக இருந்தாலும் உங்களுக்கு அவரே பூர்வ புண்ணியாதிபதி என்பதால் உங்கள் கனவுகளையும் நனவாக்குவார். அக். 20 முதல் உங்கள் ராசிக்குள் சஞ்சரிக்கும் குருவால் குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். உழைப்பு கூடும். வருமானத்திற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வசதி வாய்ப்பு அதிகரிக்கும் என்றாலும் சிலர் வேலை மற்றும் தொழில் காரணமாக குடும்பத்தைப் பிரிந்து வெளியூரில் வசிக்க நேரும். உத்திரம் 2,3,4ம் பாதத்தினருக்கு மே 26 முதல் லாப குருவாகவும், அக். 20 முதல் 12ம் வீடான விரய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பவரால், மே 26 முதல் வாழ்க்கை வளமாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். செய்துவரும் தொழில் முன்னேற்றமடையும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வரவேண்டிய பணம்வரும். சேமிப்பு உயரும். புதிய தொழில் தொடங்க முயற்சிப்பவர்களுக்கு நேரம் சாதகமாகும். புதிய வீடு, சொத்து என வாங்கும் நிலை உண்டாகும். அக். 20 முதல் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால், அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். முதலீட்டிற்கேற்ற லாபம் இல்லை என்று வருத்தப்படநேரும். உடல்நிலையும் ஒரு நேரம் இருப்பதுபோல் மறுநேரம் இல்லாமல் போகும். தொழிலில் போட்டி, எதிர்ப்பு என ஏற்படும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பாத இடத்திற்கு மாற்றம் ஏற்படும். மனதில் குழப்பம் அதிகரிக்கும் என்பது பொதுவான விதியாக இருந்தாலும், உங்கள் நட்சத்திராதிபதி சூரியனுக்கு குரு நட்பானவர் என்பதுடன், அவர் சஞ்சரிக்கும் பூசம், மகம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி ஸாதகம் மற்றும் நட்பு நட்சத்திரம் என்பதால் சோதனைகளும் சாதனைகளாகும். செய்யும் செலவுகளும் வாழ்வின் ஆதாரமாகும்.சஞ்சாரம், பார்வை பலன்குரு பகவான், தான் பார்க்கும் இடங்களுக்கு யோகப்பலன்களை வழங்கிடக்கூடியவர். அதன் காரணமாகவே குருப் பார்க்க கோடி புண்ணியம் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். உத்திரம் 1ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 4,6,8 ம் இடங்களையும், அக். 20 முதல் 5,7,9ம் இடங்களையும் குரு பார்ப்பதால், உடலில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். செய்துவரும் தொழிலில் நிலவிய போட்டி, எதிர்ப்பு என்பதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். வேலையில் நிம்மதியான நிலை உருவாகும். இழுபறியாக இருந்த விவகாரங்கள் முடிவிற்குவரும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். இதுவரை சந்தித்த பிரச்சனைகள் போராட்டங்கள் எல்லாம் உங்களை விட்டு விலகும். நஷ்டத்தில் இயங்கிய தொழில் லாபம் தரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். பூர்வீக சொத்து விவகாரம் முடிவிற்குவரும். சிலருக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். திருமண வயதினருக்கு திருமண யோகம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். புதிய வீடு வாகனம் செல்வாக்கு அந்தஸ்து என்ற கனவு நனவாகும். உத்திரம் 2,3,4ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 3,5,7ம் இடங்களையும், அக். 20 முதல் 4,6,8ம் இடங்களையும் குருப் பார்ப்பதால், வாழ்வில் இருந்த சங்கடங்கள் நெருக்கடிகள் விலகும். எடுக்கும் முயற்சிகள் லாபமாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனை முடிவிற்கு வரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். திருமண வயதினருக்கு கழுத்தில் மணமாலை ஏறும். சூழ்நிலைகளின் காரணமாக பிரிந்திருந்த தம்பதிகள் மீண்டும் ஒன்று சேருவர். வருமானம் உயரும். சொந்த வீடு வாகனம் அமையும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகி ஆரோக்கியம் மேம்படும். குடும்பம் நட்பு என்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். சிலர் புதிதாக நிலம் வாகனம் வாங்குவீர்கள். வசிக்கும் வீட்டைப் பழுது பார்த்து புதுப்பிப்பீர்கள். இதுவரையில் சந்தித்த பிரச்சனைகள் எல்லாம் உங்களை விட்டு விலகும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும்.அஸ்தமனம், வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். பொதுப்பலன்குருவின் பார்வைகளும், செவ்வாய் சூரியன் சஞ்சார நிலைகளும் சாதகமாக இருப்பதால், எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்குவரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உருவாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். செய்துவரும் தொழில் லாபம் அடையும் பொருளாதார நிலை உயரும். நீண்ட நாட்களாக இருந்த நெருக்கடிகள் நீங்கும்.தொழில் உத்திரத்தில் பிறந்தவர் உறுதியானவர் என்பதுடன் எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தில் முதன்மையாக இருந்திடக்கூடியவர் என்பதால் செய்துவரும் தொழில்மீது அக்கறையும் பக்தியும் இருக்கும். ஷேர் மார்க்கெட், டிராவல்ஸ், ஆட்டோமொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், விவசாயம் சார்ந்த தொழில்கள், சின்னத்திரை, சினிமா, யூட்யூப், ஏ.ஐ., கம்ப்யூட்டர், ஒப்பந்தங்கள், ஏற்றுமதி இறக்குமதி தொழில், ஆன்லைன் வர்த்தகம், நிதி நிறுவனம், ரெடிமேட்ஸ், அழகு சாதனம், வாகன விற்பனை, பப்ளிகேஷன் தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஆதாயம் கூடும்.பணியாளர்கள் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு திறமைக்கேற்ற மதிப்பும் ஊதியமும் கிடைக்கும். வேலையில் இருந்த சங்கடங்கள் விலகும். நிர்வாகத்தின் ஆதரவு ஏற்படும். சிலர் வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்வீர்கள். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றமும் உயர்வும்கிடைக்கும்.பெண்கள்கடந்த காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள், பிரச்சனைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். திருமண வயதினருக்கு திருமணம் நிகழும். சிலருக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். கையில் பணம் புழங்கும். பொன் பொருள் சேரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு தள்ளிப்போன பதவி உயர்வும் இடமாற்றமும் தேடிவரும்.கல்வி படிப்பில் பின் தங்கியிருந்த மாணவர்களும் இக்காலத்தில் முன்னேற்றம் அடைவர். பொதுத்தேர்விலும், போட்டித்தேர்விலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலைஆயுள்காரகன் சனி பகவானுக்கு குருப் பார்வை உண்டாவதால் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். தொற்றுநோய், பரம்பரைநோய், விபத்து என்று மருத்துவ மனைகளுக்கு தொடர்ந்து சென்று வந்தவர்களுக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியமாக செயல்படக்கூடிய நிலை உருவாகும்.குடும்பம்குருவின் சஞ்சாரமும் பார்வைகளும், சூரியன் செவ்வாய் சஞ்சார நிலைகளும், குடும்பத்தில் நிம்மதியான நிலையை ஏற்படுத்தும். நீண்டநாள் கனவுகளை நனவாக்கும். சொந்த வீடு வாகனம் என்ற ஆசைகள் பூர்த்தியாகும். பிள்ளைகளின் நலனில் அக்கறை கூடும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். பொன் பொருள் சேரும் உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.பரிகாரம் சுவேதாரண்யேசுவரரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும்.அஸ்தம்: வெற்றிமேல் வெற்றிமனக்காரகன் சந்திரன், வித்யாகாரகன் புதன் அம்சத்தில் பிறந்த நீங்கள், மதி நுட்பம் மிக்கவர்கள். எந்த ஒன்றிலும் திட்டமிட்டு செயல்படுவதுடன் நினைத்ததை சாதிக்கும் சக்தியும் பெற்றவர்கள். நாணயத்தின் இரண்டு பக்கங்களையும் பார்த்திடக்கூடிய உங்களுக்கு நல்லதும் தெரியும் கெட்டதும் தெரியும். நல்லவர்களை அறிவதுடன் தவறானவர்களை ஒதுக்கியும் வைப்பீர்கள். ஒரு முடிவிற்கு நீங்கள் வந்து விட்டால் எவராலும் உங்களை மாற்ற முடியாமல் போகும். உங்கள் ராசியாதிபதி புதன் குருவிற்கு பகையானவர் என்றாலும், நட்சத்திராதிபதி சந்திரன் நட்பானவர். இக்காலத்தில் அவர் சஞ்சரிக்கும் புனர்பூசம், ஆயில்யம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி ஸேமம், ஸாதக தாரைகள் என்பதால் இக்காலத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மே 26 முதல் உங்களுக்கு லாப குருவாக சஞ்சரிப்பவர் அக். 20 முதல் உங்கள் ராசிக்கு 12ம் வீடான விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். மே 26 முதல் லாப ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குருவால், இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடிகள் போராட்டங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். வீடு, வாகனம், பட்டம், பதவி என்ற கனவுகள் நனவாகும். கடந்த காலத்தில் இழந்தவற்றை மீண்டும் அடையக்கூடிய நிலை உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மனநிலையில் தெளிவு ஏற்படும். நீங்கள் நினைத்த ஒவ்வொன்றும் நினைத்தபடியே நடக்கும். பொருளாதார நிலை உயரும். சிலருக்கு உயர் பதவிகள் தேடிவரும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். நண்பர் உறவினரிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மணவாழ்வில் முறிவு ஏற்பட்டவர்களுக்கு புதிய துணை அமையும். நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். கோயில் தரிசனம் மேற்கொள்ளும் வாய்ப்பு சிலருக்கு உண்டாகும்.அக். 20 முதல் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால், பலவகையிலும் செலவுகள் ஏற்படும் அலைச்சல் அதிகரிக்கும் செய்துவரும் தொழிலில் நெருக்கடி ஏற்படும் வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும் கையிருப்பு குறையும்.சஞ்சாரம், பார்வை பலன்குரு பகவான் 2,5,7,9,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் சஞ்சார ரீதியாக யோகப்பலன்களை வழங்குவார். அதே நேரத்தில் எந்த இடத்தில் சஞ்சரித்தாலும் தான் பார்க்கும் 5,7,9 ம் இடங்களை சுபிட்சமாக்குவார். இதன் காரணமாகவே குருப்பார்க்க கோடி புண்ணியம் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். மே 26 முதல் 3,5,7ம் இடங்களைப் பார்க்கும் குருவால், உங்கள் வாழ்க்கை வளமாகும். உங்களுக்கிருந்த நெருக்கடிகள், தடைகள் விலகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்கள் பலம் கூடும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்க முடியும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வேலையில் ஏற்பட்ட மறைமுக எதிர்ப்பு விலகும். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். திருமண வயதினருக்கு பொருத்தமான வரன் வரும். வேலை நிமித்தமாக பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரக்கூடிய நிலை உருவாகும்.அக். 20 முதல் 4,6,8ம் இடங்களைக் குரு பார்ப்பதால், உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகி ஆரோக்கியம் மேம்படும் வசதி வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளும் வகையில் நிறையவே செலவுகள் செய்வீர்கள். வசிக்கும் இடத்தையும் மாற்றி அமைப்பீர்கள். பொது வாழ்க்கையில் ஈடுபட்டு இருப்பவர்கள் புகழுக்காக செலவுகள் மேற்கொள்வீர்கள். திடீர் வாய்ப்புகள் தேடிவரும். உங்கள் செல்வாக்கு உயரும்.அஸ்தமனம், வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். பொதுப்பலன்அக். 20 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் உங்கள் வாழ்க்கை வளமாகும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். நவ. 13 வரை சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் உங்கள் செல்வாக்கு உயரும். ஆரோக்கியம் மேம்படும். வழக்கு விவகாரம் முடிவிற்கு வரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். நவ. 13 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் வருமானம் அதிகரிக்கும். கடன் தொல்லை விலகும். கையில் பணம் புரளும். பொருளாதார நிலை உயரும்.தொழில்திட்டமிட்டு செயல்படக்கூடிய உங்களுக்கு, தொழிலில் வெற்றி அடைய வேண்டும் என்ற லட்சியம் எப்போதும் இருக்கும். இக்காலம் உங்கள் முயற்சிகள் வெற்றியடையும் காலமாகும். செய்துவரும் தொழில் வளர்ச்சி அடையும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். கல்வி நிறுவனம், நிதி நிறுவனம், பங்குச்சந்தை, நோட்டுப்புத்தகம் தயாரிப்பு, ஆன்லைன் வர்த்தகம், அரசு மற்றும் தனியார் ஒப்பந்ததாரர்கள், ஏற்றுமதி இறக்குமதி, ஜவுளி, குடிநீர், வேளாண்மை, ஜுவல்லரி, கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், ட்ரான்ஸ்போர்ட், பப்ளிகேஷன், திரைப்படம், சின்னத்திரை, வலைதளம் தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கு லாபம் அதிகரிக்கும்.பணியாளர்கள் எந்த நேரத்தில் வேலையை விட்டு அனுப்பி விடுவார்களோ என்று பயந்து பயந்து வேலைப்பார்த்து வந்தவர்களுக்கு மனதில் நிம்மதி உண்டாகும். வேலையில் ஏற்பட்ட பயம் போகும். நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். தடைபட்ட பதவி உயர்வு இடமாற்றம் கிடைக்கும்.பெண்கள்கடக குருவும், கும்ப ராகுவும், நவ. 13 முதல் லாப கேதுவும் முன்னேற்றப் பாதையில் நடைபோட வைப்பர். உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவுகள் நனவாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். கணவருடன் இணக்கமான நிலை இருக்கும். திருமண வாழ்வில் முறிவு ஏற்பட்டவர்களுக்கு மறுமணம் நடந்தேறும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் சேரும். உறவினர் மத்தியில் செல்வாக்குடன் வாழும் நிலை உருவாகும்.கல்வி படிப்பில் இருந்த தடைகள் விலகும். வாழ்க்கையின் ஆதாரம் கல்வி என்பதை உணருவீர்கள். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் வரும். விரும்பிய கல்லூரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.உடல்நிலைகுருப்பார்வைகளும், ஆறாமிட ராகுவும் உங்களை ஆரோக்கியமாக நடைபோட வைப்பர். நோய்நொடி என்று அவதிப்பட்ட நிலைமாறும். மருத்துவச்செலவு குறையும். மனதில் நிம்மதி உண்டாகும்.குடும்பம்குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும் அந்தஸ்து கௌரவம் செல்வாக்கு உயரும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும் இடம் வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.பரிகாரம் ஆண்டாள் அழகரை வழிபட சங்கடங்கள் விலகும். வாழ்வில் நன்மை உண்டாகும்.சித்திரை 1,2: வளமுடன் வாழ்வீர்கள்ரத்தக்காரகன் யுத்தக்காரகனான செவ்வாயை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும், 1,2 ம் பாதங்களான கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும், 3,4 ம் பாதங்களான துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர். எந்த ஒன்றிலும் தைரியத்துடனும் அதே நேரத்தில் திட்டமிட்டும் செயல்பட்டு வெற்றியை அடைபவர்கள் நீங்கள்.சித்திரை 1,2 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 11 ம் வீடான லாப ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரித்து, அக். 20 முதல் அதிசாரமாக விரய ராசிக்குள் சஞ்சரிக்கும் குருவால், மே 26 முதல் வாழ்க்கை வளமாகும். எடுத்த காரியங்கள் வெற்றியாகும். செல்வம் செல்வாக்கு அந்தஸ்து உயரும். வீடு வாகனம் பட்டம் பதவி என்ற கனவுகள் நனவாகும். கடந்த காலத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உடல் நிலையில் முன்னேற்றம், மனநிலையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அக். 20 முதல் விரய ஸ்தானமான 12 ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால், பல வகையிலும் செலவு அதிகரிக்கும். அலைச்சல் ஏற்படும். சாதாரணமாக நடத்தி முடித்த வேலைகளையும் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும். செய்துவரும் தொழிலில் தடைகளும் நெருக்கடிகளும் ஏற்படும். பார்த்துவரும் வேலையிலும் பிரச்சனைகள் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். அதனால் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலையும் உருவாகும்.சித்திரை 3,4 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் ஜீவன ஸ்தானமான 10 ம் இடத்திலும், அக். 20 முதல் 11ம் வீடான லாப ஸ்தானத்திலும் குரு சஞ்சரிப்பதால், மே 26 முதல், செய்து வரும் தொழிலில் திடீர் நெருக்கடிகள் ஏற்படும். முதலீட்டிற்கேற்ற ஆதாயம் இல்லாமல் போகும். பார்த்துவரும் வேலையில் பிரச்சனைகளும் எதிர்பாராத இடமாற்றமும் ஏற்படும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சியில் தடைகள் தோன்றும். அக். 20 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, உங்கள் கனவுகளை நனவாக்குவார். வசதி வாய்ப்புகளை அதிகரிப்பார். பணப்புழக்கத்தை உண்டாக்குவார். வாழ்க்கையில் ஏற்பட்ட போராட்டங்களை இல்லாமல் செய்வார். வியாபாரம் மற்றும் தொழிலில் ஆதாயத்தை அதிகரிப்பார். பெரியோரின் ஆதரவை ஏற்படுத்துவார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றத்தையும் பதவி உயர்வையும் வழங்குவார். செல்வாக்கையும் அந்தஸ்தையும் உயர்த்துவார். உங்கள் நட்சத்திராதிபதியான செவ்வாய் குருவிற்கு நட்பானவர் என்பதால் சோதனையான நேரத்திலும் உங்களைப் பாதுகாப்பார் என்பதுடன், அவர் சஞ்சரிக்கும் பூசம், மகம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி ஷேமம் மற்றும் ஸாதக தாரைகள் என்பதால் பூசம், மகம் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும்போது நன்மைகள் அதிகரிக்கும். வாழ்க்கை வளமாகும்.சஞ்சாரம், பார்வை பலன்குரு பகவான் தான் பார்க்கும் இடங்களுக்கு யோகமான பலன்களை வழங்கிடக்கூடியவராவார். சித்திரை 1,2 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 3,5,7 ம் இடங்களைக் குரு பார்ப்பதால், உங்கள் வாழ்வில் இருந்த சங்கடங்கள் நெருக்கடிகள் யாவும் விலகும். எடுக்கும் முயற்சிகள் லாபமாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனை முடிவிற்கு வரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். கருத்து வேறுபாட்டால் பிரிந்திருந்த தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழும் நிலை உருவாகும். தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும். அக். 20 முதல், 4,6,8 ம் இடங்களைக் குரு பார்ப்பதால், சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செலவிற்கேற்ற வருமானம்வரும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள், வம்பு வழக்குகள் முடிவிற்கு வரும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்ப்பு பகை நோய் நொடி என்பதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். வேலைப் பார்க்கும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். சித்திரை 3,4 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 2,4,6 ம் இடங்களைக் குரு பார்ப்பதால், பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பம், பிரச்சனைகள் விலகி நிம்மதி உண்டாகும். உடலில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். தொழிலில் ஏற்பட்ட போட்டி எதிர்ப்பு விலகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். மனதில் இருந்த சங்கட நீங்கும். பல வழியிலும் வருமானம் வர ஆரம்பிக்கும். வாழ்வில் முன்னேற்றப் பாதைத் தெரியும். தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தாய்வழி உறவுகளின் ஆதரவு அதிகரிக்கும். நோய்கள் தீரும். மகிழ்ச்சி நிலைக்கும். அக். 20 முதல் 3,5,7 ம் இடங்களைக் குரு பார்ப்பதால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்க முடியும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். வேலையில் ஏற்பட்ட மறைமுக எதிர்ப்பு விலகும். தொழில் முன்னேற்றம் அடையும். திருமண வயதினருக்கு பொருத்தமான வரன் வரும். வேலை நிமித்தமாக பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேரக்கூடிய நிலை உருவாகும். சகோதர சகோதரிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். செய்து வரும் தொழிலை விரிவு செய்வீர்கள். சோதனைகளை மட்டுமே சந்தித்து வந்தவர்களுக்கு சாதனைகள் புரியும் வாய்ப்பு உண்டாகும்.அஸ்தமனம், வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். பொதுப்பலன்சித்திரை 1,2 ம் பாதத்தினருக்கு லாப குருவும், சத்ரு ஜெய ஸ்தான ராகுவும், நவ. 13 முதல் கேதுவும் யோகப் பலன்களை வழங்குவர். 3,4 ம் பாதத்தினருக்கு சத்ரு ஜெய ஸ்தான சனியும், அக். 20 முதல் குருவும், இக்காலம் முழுவதும் குருப்பார்வைகளும் நன்மைகளை உண்டாக்கும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். செல்வம், செல்வாக்கு உயரும். குடும்பத்தில் நிம்மதி தொழிலில் லாபம், உத்தியோகத்தில் முன்னேற்றம் என ஏற்படும்.தொழில்எந்த ஒன்றிலும் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர்கள் நீங்கள். செய்யும் தொழிலிலும் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு இக்காலம் யோகமான காலமாகும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், கெமிக்கல் தயாரிப்பு மற்றும் விற்பனை, மெடிக்கல், மருத்துவம் சார்ந்த தொழில்கள், உணவகம், விவசாயம் சார்ந்த தொழில்கள், ரசாயன பொருட்கள், குடிநீர் சார்ந்த தொழில்கள் மற்றும் விற்பனை, பப்ளிகேஷன், ஷேர் மார்க்கெட், நிதி நிறுவனம், எக்ஸ்போர்ட், ஆடை ஆபரணம், காலண்டர் நோட்டுப் புத்தகம் தயாரிப்பு மற்றும் விற்பனை, தனியார் பள்ளிகள், ஏ.ஐ., யூடியூப், சின்னத்திரை, சினிமா மற்றும் அதைச்சார்ந்த தொழில்கள் லாபம்தரும்.பணியாளர்கள் வேலையில் நிம்மதி இல்லை, எதிர்பார்த்த ஊதியம் இல்லை, சலுகைகள் கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டு வந்தோரின் நிலை மாறும். நிர்வாகத்தின் ஆதரவு ஏற்படும். எதிர்பார்த்த பொறுப்பும் சலுகைகளும் கிடைக்கும். அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைபட்டு வந்த இடமாற்றம் பதவி உயர்வு தேடிவரும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.பெண்கள்எந்த ஒன்றிலும் நிம்மதி இல்லை, எதை எடுத்தாலும் பிரச்சனை போராட்டம் என்றிருந்த நிலை மாறும். செல்வாக்கு உயரும். சொல்வாக்கிற்கு மரியாதை உண்டாகும். படிப்பு வேலை திருமணம் என்ற அவரவர் கனவு நனவாகும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். எதிர்பார்த்த வேலைக்கிடைக்கும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். கணவன் மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழக்கூடிய நிலை உருவாகும்.கல்வி படிப்பின் மீது அக்கறை ஏற்படும். தவறான நண்பர்களை விட்டு விலகுவீர்கள். பொதுத்தேர்வு போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும். சிலர் மேற்கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு என்றும் செல்வீர்கள்.உடல்நிலைபரம்பரை நோய், தொற்று நோய், விபத்து என்று மருத்துவ மனைகளுக்கு சென்று வந்தோரின் நிலையில் மாற்றம் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும். நோயினால் ஏற்பட்ட பயம் விலகும். சிலருக்கு இயற்கை வைத்தியம் பலன் தரும்.குடும்பம்குடும்பத்தில் இருந்த சங்கடமான நிலை மாறும் நீண்டநாள் கனவுகள் நனவாகும். சொந்த இடம் வீடு வாகனத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட சச்சரவுகள் தீரும். பொருளாதார நிலை உயரும். பிள்ளைகளின் கல்வி திருமணம் என்ற எண்ணம் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும்.பரிகாரம் சங்கர நாராயணரை வழிபட சங்கடங்கள் விலகும். வேண்டுதல் பலிதமாகும்.