உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் கடகம்

கடகம்பகைவரிடமும் கண்ணியமுடன் நடக்கும் கடக ராசி அன்பர்களே! ராசிக்கு  4-ம் இடமான துலாம் ராசியில் குருபகவான் இருப்பதால் மன உளைச்சல், உறவினர் வகையில் வீண் பகை உருவாகும். 2018 அக்.10ல்  விருச்சிக ராசிக்கு மாறிய பின், சிறப்பான பலன் கிடைக்கும். குடும்ப வாழ்வில் குதூகலம் உண்டாகும். சுப நிகழ்ச்சி நடந்தேறும். பெண்களால் மேன்மை கிடைக்கும். 2019 பிப்.10ல் 6-ம் இடமான தனுசு ராசிக்கு செல்லும் போது நன்மை குறையும். ராகு தற்போது உங்கள் ராசியில் இருப்பது சுமாரான நிலையே. முயற்சிக்குரிய பலன் இல்லாமல் போகலாம்.2019 பிப்.13ல் ராகு, ராசிக்கு 12-ம் இடமான மிதுனத்திற்கு செல்வதாலும் நற்பலன் உண்டாகாது. பொருள் விரயம், தூரதேச பயணம் உண்டாகும். கேது 7-ல் இருப்பதால் மனைவி வகையில் பிரச்னை உருவாகலாம். உடல்நிலை சுமாராக இருக்கும். 2019 பிப்.13ல் அவர் 6-ம் இடமான தனுசு ராசிக்கு வருகிறார். அங்கு அவர் சனிபகவானோடு இணைந்து நற்பலன் தருவார்.  பொன்னும், பொருளும் தாராளமாக கிடைக்கும். சனிபகவான் 6-ம் இடமான தனுசு ராசியில் நின்று நன்மை அளிப்பதோடு, அவரது 10-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது. சனி பலத்தால் இந்த காலம் நல்ல காலமாக அமையும்.    2018 ஏப்ரல் – செப்டம்பர் தேவை நிறைவேறும் விதத்தில் பணப்புழக்கம் இருக்கும். சுபவிஷயத்தில் தாமதம் ஏற்படலாம். உறவினர் வகையில் அனுகூலம் இருக்காது. வீடு,மனை வாங்கும் முயற்சி தள்ளிப் போகும். இருப்பினும் சனிபகவான் 6-ம் இடத்தில் இருப்பதால் சாதக பலனை எதிர்பார்க்கலாம். பணியாளர்களுக்கு  உழைப்புக்குஏற்ற பலன் கிடைக்கும்.வியாபாரிகளுக்கு சனி பலத்தால் தொழில் வளர்முகமாக இருக்கும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். புதிய வியாபாரம் நல்ல  அனுகூலத்தைகொடுக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற விடாமுயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைப்பதில் தாமதம் ஆகலாம். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது.மாணவர்கள் அசட்டையாக இருக்க வேண்டாம். ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடக்கவும். விவசாயிகள் அதிக முதலீடு தேவைப்படும் பயிர்களை பயிர் செய்ய வேண்டாம்.  பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதை தவிர்க்கவும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால் கோரிக்கைகள் நிறைவேறும். 2018 அக்டோபர் – 2019 ஏப்ரல் குருபகவான்  சாதகமான இடத்துக்கு வருவதால் ஆற்றல் மேம்படும்.  குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும்.  தடைபட்ட சுபநிகழ்ச்சி இனிதே கைகூடும். பொருளாதார வளம் பெருகும். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.  பணியாளர்களுக்கு சக பெண் ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலை அடைவர். விண்ணப்பித்த கோரிக்கைகள் நிறைவேறும். வேலையில் திருப்தி உண்டாகும். அதிகாரிகள் ஆதரவுடன் செயல்படுவர்.  விரும்பிய இடத்திற்கு மாற்றம்  பெறலாம். பிப்.10க்கு பிறகு விடாமுயற்சி தேவைப்படும். வியாபாரிகள் தொழில் வளர்முகமாக இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிப்.13க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். புதிய வியாபாரம் நல்ல அனுகூலத்தை கொடுக்கும். பகைவர் தொல்லை மறையும்.கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பலனைக் காணலாம். பொது மக்களிடையே நற்பெயர் கிடைக்கும். பிப்.13க்குபிறகு எதிர்பார்த்த பதவி, புகழ் கிடைக்கும்.மாணவர்கள் முன்னேற்ற நிலையில் காணப்படுவர். உயர்கல்விக்காக சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். விவசாயிகள் வருமானத்திற்கு குறைவிருக்காது.நெல்,சோளம், பழவகைகளில் நல்ல மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரத்தில்  சுமாரான முடிவு உண்டாகும்.  பிப்.13க்கு பிறகு  புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும்.  பெண்கள்  தடைபட்ட திருமணம்  கைகூடும். குடும்பத்தாரிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். சகோதரிகள் ஆதரவுடன் செயல்படுவர். விருந்து விழா என சென்று வருவீர்கள்.  ஆடை, அணிகலன்கள் வாங்கலாம். சுயதொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.பரிகாரம்: *  வியாழனன்று குருபகவான் வழிபாடு* அஷ்டமியன்று பைரவருக்கு வடைமாலை* சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு தீபம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !