உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் கன்னி

கன்னிநல்லவர் நட்பை விரும்பி ஏற்கும் கன்னி ராசி அன்பர்களே! புத்தாண்டின் முற்பகுதியில் நன்மை பன்மடங்கு கிடைக்கப் பெறுவீர்கள். குருபகவான் 2-ம் இடமான துலாம் ராசியில் இருப்பது சிறப்பான அம்சம். குருவால் மனதில் துணிச்சல் பிறக்கும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தேவை பூர்த்தியாகும். பகைவர் சதி உங்களிடம் எடுபடாது. ஆனால் அவர் 2018 அக்.5 ல் 3-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறுகிறார். அப்போது அவரால் நன்மை தர இயலாது. குரு 3-ம் இடத்தில் இருக்கும் போது நன்மை குறையும். குரு பிப்.10ல் 4-ம் இடமான தனுசு ராசிக்கு மாறுகிறார். அப்போதும் அவரால் நற்பலன் கொடுக்க முடியாது.ராகு உங்கள் ராசிக்கு 11-ம் இடமான கடகத்தில் இருப்பது சிறப்பு. லாபமோ லாபம் என பொருளாதாரம் செழிக்கும். பெண்களால் அனுகூலம் உண்டாகும். 2019 பிப்.13ல் ராகு உங்கள் ராசிக்கு 10-ம் இடமான மிதுனத்திற்கு செல்வது சிறப்பானதல்ல. அவரால் சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். பெண்கள் வகையில் இடையூறு குறுக்கிடலாம். கேது தற்போது 5-ம் இடமான மகரத்தில் இருப்பதால் அரசு வகையில் பிரச்னை வரலாம். 2019 பிப்.13ல் 4-ம் இடமான தனுசு ராசிக்கு வருகிறார். அவரால் உடல்நலம் பாதிக்கலாம்.சனிபகவான் தற்போது 4-ம் இடத்தில் இருப்பதால் வீண் விரோதம், ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகலாம்.அவரது 3-ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளது. அதன் மூலம் நன்மை கிடைக்கும். 2018 ஏப்ரல் –  செப்டம்பர்முயற்சியில் இருந்த தடை அனைத்தும் விலகும். பணப்புழக்கத்துக்கு குறைவிருக்காது. சமூகத்தில் மதிப்பு சிறப்பாக இருக்கும். பொருளாதார வளம் பெருகும். தேவை அனைத்தும் பூர்த்தியாகும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். உறவினருடன் இணக்கம் உண்டாகும். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு.  குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்கலாம்.  பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்கு திடீர் இடமாற்றம் உண்டாகும்.  தொழில், வியாபாரத்தில் வருமானம் பன்மடங்கு உயரும். சேமிக்க வாய்ப்புண்டு. கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும்.  கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். புகழ், பாராட்டு எதிர் பார்த்தபடி இருக்கும். அரசியல்வாதிகள் மேம்பாடு அடைவர். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.   மாணவர்களுக்கு கடந்த காலத்தில் இருந்த தேக்கநிலை இருக்காது. போட்டிகளில் வெற்றி பெறவும் வாய்ப்புண்டு. வெளிநாடு சென்று படிக்க வாய்ப்புண்டாகும்.  விவசாயிகளுக்கு சிறப்பான மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்கலாம். பெண்கள் குதூகலமான பலன் பெறுவர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தாரின்  நன்மதிப்பை பெறுவர். விருந்து, விழா என சென்று வருவீர்கள். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடும். 2018 அக்டோபர் – 2019 ஏப்ரல் பணப் புழக்கத்துக்கு குறைவுஇருக்காது. குடும்பத்தேவை குறைவின்றி பூர்த்தியாகும்.  அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர்.  உறவினர் மத்தியில் நெருக்கம் அதிகரிக்கும்.பணியாளர்கள் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.  குருபகவானின்  பார்வையால் உங்கள் திறமை பளிச்சிடும்.  பிப்.10க்கு பிறகு கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். கோரிக்கை நிறைவேறு வதில் தாமதம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகள் இடையே ஒற்றுமை பலப்படும். பிப்.13 க்கு பிறகு அரசு வகையில் இருந்த  அனுகூலமற்ற போக்கு மறையும்.  அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.  கலைஞர்களுக்கு விடாமுயற்சியால் புதிய  ஒப்பந்தம் கையெழுத் தாகும். அரசியல்வாதிகள் வாழ்வில் மேம்பாடு அடைவர். பதவியும், பணமும் கிடைக்கும்.  பிப்.13க்கு பிறகு சுமாரான பலனே கிடைக்கும்.  மாணவர்கள் உயர்கல்வி பெற வெளிநாடு செல்வர். பிப்.10 க்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கும். புதிய சொத்து வாங்கலாம். பிப்.13 க்கு பிறகு வழக்கு, விவகாரத்தில் முடிவு சுமாராக இருக்கும் பெண்கள் வாழ்வில் குதூகலமான அனுபவம் காண்பர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகள் கைகூடும். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். பிப்.10க்கு பிறகு எதிலும் விட்டுக் கொடுத்து போகவும். உடல் நலம் சுமாராக இருக்கும். பரிகாரம்:* பிரதோஷத்தன்று சிவனுக்கு வில்வமாலை* வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை * வெள்ளியன்று காளிக்கு நெய் விளக்கு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !