உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் மிதுனம்

மிதுனம்உள்ளத்தால் உயர்ந்து நிற்கும் மிதுன ராசி அன்பர்களே!  குரு சாதகமாக இருக்கும் நிலையில் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. குருபகவான் ராசிக்கு 5-ம் இடத்தில் இருப்பது சிறப்பான நிலை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். பொருளாதார வளம் சிறக்கும். பெண்களால் மேன்மை கிடைக்கும். சுபநிகழ்ச்சி சிறப்பாக  நடந்தேறும். குவா குவா சத்தம் ஒலிக்க குழந்தைப்பேறு கிடைக்கும். அவரது 5,7ம் இடத்து பார்வைகளால் நன்மை அதிகரிக்கும். ஆனால் அவர் 2018 அக்.5ல் 6-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறுவதால் நன்மை தர இயலாது. 2019 பிப்.10ல் 7-ம் இடமான தனுசு ராசிக்கு செல்வதால் மீண்டும் நன்மை அதிகரிக்கும். ராசிக்கு 2-ம் இடமான கடகத்தில்  ராகு இருப்பதால் பொருளாதார இழப்பு ஏற்படலாம்.  2019 பிப்.13ல் உங்கள் ராசிக்கு மாறுவதும் சுமாரான நிலை தான். இங்கு அவரால் வீண் அலைச்சல் ஏற்படலாம். முயற்சிக்கு பலன் இல்லாமல் போகலாம்.கேது  8-ம் இடத்தில் இருப்பதால்  உடல் நலக்குறைவு உண்டாகலாம். 2019 பிப். 13ல் 7-ம் இடத்திற்கு அவர் மாறிய பின்  எதிரி தொல்லை குறுக்கிடலாம்.  சனிபகவான் தற்போது 7-ம் இடமான தனுசு ராசியில் உள்ளதால் வீண்அலைச்சல் அதிகரிக்கும் வெளியூர் வாசம் நிகழும். 2018 ஏப்.28 முதல் செப்.11 வரை சனிபகவான் வக்கிரம் அடைவதால் கெடுபலன் குறையும். 2018 ஏப்ரல் –  செப்டம்பர் வீட்டில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. தம்பதியிடையே அன்பு நீடிக்கும். உறவினர் வகையில் அனுகூலமான போக்கு உண்டாகும். குருவின் பார்வை மூலம்  நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். சகஊழியர்கள்  ஆதரவுடன் இருப்பர். அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  வியாபாரிகள்  அதிக லாபம் கிடைக்க பெறுவர். கூட்டாளிகளிடையே ஒற்றுமை நீடிக்கும். புதிய தொழில் முயற்சி வெற்றி பெறும்.   கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசிடம் இருந்து விருது கிடைக்கப்பெறுவர். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்களுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது. மாணவர்கள்  கல்வியில் முன்னேற்றம் காண்பர். ஆசிரியர்களின் ஆலோசனையால் நன்மை உண்டாகும். போட்டிகளில் வெற்றி காண்பர். விவசாயிகளுக்கு உழைப்புக்கு தகுந்த வருமானம் வரும்பெண்கள் குடும்பத்துடன் புனித தலங்களுக்கு சென்று வருவர். தடைபட்ட திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். ஆடை, அணிகலன்கள் வாங்கலாம். உடல்நிலை சீராக இருக்கும்.2018 அக்டோபர் – 2019 ஏப்ரல் கணவன், மனைவி இடையே அவ்வப்போது சச்சரவு வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பது நல்லது. 2019 பிப். 10க்கு பிறகு பெண்களால் மேன்மை கிடைக்கும். சமூகத்தில் செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் நிறைவேறும். பணியாளர்களுக்கு பொறுமையும் நிதானமும் தேவை. சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம். இதனால் தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரியும் நிலை உருவாகலாம். பிப். 10க்கு பிறகு சக பெண் ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். வியாபாரத்தில் முதலீடு விஷயத்தில்  கவனம் தேவை. புதிய தொழில் தற்போது தொடங்க வேண்டாம். எதையும் சிந்தித்து செயல்படுத்துவது நல்லது. பிப்.10க்கு பிறகு  லாபம் அதிகரிக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்  நல்ல முன்னேற்றம் அடையும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது. மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடக்கவும். பிப்.10க்கு பிறகு கல்வியில் முன்னேற்றம் காண்பர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவர்.   விவசாயத்தில் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும்.  ஆனால், அதற்கேற்ற வருமானம் கிடைக்காமல் போகாது. பிப்.10க்கு பிறகு நெல், மஞ்சள், பழவகைகள், காய்கறிகள் வகையில் நல்ல மகசூல் கிடைக்கப் பெறுவர்.பெண்கள் குடும்பத்தாரிடம் பொறுமையை பின்பற்றுவது நல்லது. வாக்குவாதம் தவிர்க்கவும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். பிப்.10க்கு பிறகு தடைபட்ட திருமணம் கைகூடும்.  குடும்பத்தாரின் மத்தியில் மதிப்பு உயரும்.  புண்ணிய தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் வளர்ச்சி காண்பர். தொழில் புரியும் பெண்களுக்கு வருமானம் அதிகரிக்கும். பரிகாரம்:* செவ்வாயன்று ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு* வியாழனன்று குருபகவானுக்கு அர்ச்சனை * சனியன்று சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !