உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் ரிஷபம்

ரிஷபம்திட்டமிட்டு செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே! இந்த சார்வரி ஆண்டின் தொடக்கத்தில் குருவால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. ஜூலை 7க்கு பிறகு அவர் மனவேதனையும், நிலையற்ற தன்மையும் கொடுப்பார். பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். வீண் விரோதத்தை உருவாக்குவார். ஆனால் அவரது 7ம் இடத்துப் பார்வையால்  பிரச்னையை முறியடிக்கும் வல்லமை கிடைக்கும். உங்களது ஆற்றல் மேம்படும். மந்தநிலை மாறும். துணிச்சல் பிறக்கும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர் சதி உங்களிடம் எடுபடாது. நவ.13க்கு பிறகு ஒன்பதாமிடத்து குரு நற்பலனை வாரி வழங்குவார்.  பொன், பொருள் சேரும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  புதிய வீடு,மனை, வாகனம் வாங்கலாம். உறவினர்கள் பகையை மறந்து ஒன்று சேருவர்.  சனி பகவானால் டிச.26க்கு பிறகு முயற்சிகளில் தடைகள் வரலாம், எதிரிகளின் இடையூறு தலைதுாக்கலாம். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும் ஆனால் அவரது பார்வையால் நன்மை கிடைக்கும். ராகு சிற்சில பிரச்னையையும் துாரதேச பயணத்தையும் ஏற்படுத்துவார். பொருட்களை களவு கொடுக்க நேரிடலாம். பொருளாதார இழப்பு ஏற்படலாம். ஆக. 31க்கு பிறகு அவரால் வீண் அலைச்சல் ஏற்படலாம். கேதுவால் செயல் முடக்கம், உடல் நலக் குறைவு ஏற்படலாம். ஆக.31க்கு பிறகு அவரால் கூட்டாளிகள் வகையில் பிரச்னை. வீண் மனவேதனை உருவாகலாம்.பெண்கள் மகிழ்ச்சியுடன் குடும்பவாழ்வில் ஈடுபடுவர். கணவரின் அன்பு கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவுடன் இருப்பர். விருந்து விழா என சென்று வருவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஜூலை7க்கு பிறகு குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அண்டை வீட்டாரிடம் வீண் பேச்சு வேண்டாம். நவ.11க்கு பிறகு  தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு.சிறப்பான பலன்கள்* தொழிலதிபர்கள் டிச.26 க்கு பிறகு அனுகூல பலன் பெறுவர்.  சனிபகவானின் 7-ம் பார்வையால் பொருளாதார வளம்,  மகிழ்ச்சி, தொழில் விருத்தி உண்டாகும். உங்களிடம் வேலை பார்ப்பவர்கள் நன்றியுடன் செயல்படுவர். வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம்.* வியாபாரிகள் குருவால் நற்பலன் பெறுவர். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை அடைவர். * தரகு, கமிஷன் தொழிலில் அலைச்சலும், மனஉளைச்சலும் குறுக்கிட்டாலும் போகபோக வளர்ச்சி உண்டாகும். டிச.26 முதல் அதிக வருமானம் காணலாம்.* தனியார் துறையினர் ஜூலை 7 வரை பொருளாதார வளம் காண்பர்.  தடைகளை எளிதில் முறியடித்து வெற்றி காண்பீர்கள். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வேலையில் மகிழ்ச்சியும், நிம்மதியும் உருவாகும்.* ஐ.டி., துறையினர் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். தேவையான வசதிகள் கிடைக்கப் பெறுவர். * மருத்துவர்களுக்கு படிப்படியாக நன்மை அதிகரிக்கும். ஆரம்பத்தில் குருபகவான் பார்வையால் திட்டமிட்ட செயல்களை சிறப்பாக செய்து முடிக்கலாம். செலவுகள் குறுக்கிட்டாலும் அதை ஈடுகட்டும் அளவுக்கு வருமானம் இருக்கவே செய்யும். நவ.13க்கு பிறகு தடைகள் பனி போல் விலகும். * வக்கீல்கள் தொழிலில் சிறந்து விளங்குவர். சாதுர்யத்துடன் பேசி யாரையும் சமாளித்து விடுவீர்கள். * ஆசிரியர்கள் நவ.13க்கு பிறகு சம்பள உயர்வு கிடைக்கப் பெறுவர்.  விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு.  வேலையை இழந்தவர்கள் மீண்டும் வேலை கிடைக்க பெறுவர். * போலீஸ், ராணுவத்தினருக்கு பணப்புழக்கத்தில் எந்த பின்னடைவு ஏற்படாது. வேலை பார்த்துக் கொண்டே பக்கத்தொழில் செய்பவர்கள் நவ.13க்கு பிறகு பொருளாதார வளம் காணலாம்.* பொதுநல சேவகர்கள் நவ.13க்கு பிறகு பின்தங்கிய நிலை மறையும். வேலையில் பளு குறையும். எழுத்தாளர்கள் நல்ல புகழும் பெருமையும் கிடைக்க பெறுவர்.* கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நற்பெயரும், புகழும் கிடைக்கப் பெறுவர்.* விவசாயிகளுக்கு மஞ்சள் மொச்சை, கடலை,  நெல் போன்ற தானியங்களில் அதிக மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் போதிய வருமானம் கிடைக்கும். விவசாயக் கூலி வேலைகள் செய்பவர்கள் மன நிம்மதியுடன் இருப்பர். * பள்ளி, கல்லுாரி மாணவர்கள் போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பர். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கப் பெறுவர்.  ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்புண்டாகும். சுமாரான பலன்கள்* தொழிலதிபர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். நமக்கு ஏது எதிரி என்று அசட்டையாக இருந்து விடாதீர்கள். மறைமுக பகைவரால் அவ்வப்போது இடையூறு வரலாம். எனவே அவர்கள் பக்கம் ஒரு கண் இருப்பது நல்லது.* வியாபாரிகள் ஜூலை 7க்கு பிறகு பிரச்னைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். பணவிரயம் ஏற்படலாம். எதிரிகள் வகையில் ஒரு கண் இருப்பது நல்லது.* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள்  ஜூலை 7-ந் தேதி முதல்  நவம்பர் 13-ந் தேதி வரை ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். சக பெண்ஊழியர்கள் வகையிலும் அவ்வளவு அனுகூலம் காணப்படவில்லை.* ஐ.டி., துறையினர்  ஜூலை7க்கு பிறகு மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். தீவிர முயற்சியின் பேரில் கோரிக்கைகள் நிறைவேறும்.* வக்கீல்கள்  டிசம்பர்26க்கு பிறகு  பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். ஆனாலும் குரு மற்றும் சனி பார்வையால் அதை முறியடிப்பீர்கள்.* ஆசிரியர்கள் ஜூலை 7 முதல் நவ.13 வரை  நற்பலனை எதிர்பார்க்க முடியாது. வேலையில் பளு அதிகரிக்கும். ஆனாலும் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.  சிலர் வீண்குழப்பத்தால் வேலையில் ஆர்வம் இல்லாமல் இருப்பர். முக்கிய வேலையை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் இருப்பது நல்லது.* அரசு பணியாளர்கள் ஜூலை 7 முதல்  நவ. 13 வரை  வேலைப்பளுவைச் சந்திப்பர். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.  சிலருக்கு வேலையில் வெறுப்பு ஏற்படலாம். சிலர் வேலையை விட்டு விடலாமா என யோசிப்பர். குருவின் பார்வை பக்கபலமாக இருப்பதால்  விபரீத விளைவு ஏற்படாது. * அரசியல்வாதிகள் தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். * கலைஞர்கள் ஜூலை 7 முதல் நவ.13 வரை புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைப்பதில் தாமதம் ஆகலாம்.* விவசாயிகள் ஜூலை 7க்கு பிறகு அதிக செலவு பிடிக்கும் பயிர்களை தவிர்க்கவும். வழக்கு, விவகாரங்களில் இழுபறி நிலை நீடிக்கம். * பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஜூலை 7 முதல்  நவ.13 வரை முயற்சி எடுத்து படிக்கவும். ஆசிரியர்களின் அறிவுரை கேட்டு நடக்கவும். பரிகாரம்: * ராகு, கேதுபகவானுக்கு சிறப்பு அர்ச்சனை* வெள்ளிக்கிழமையில் அம்மனுக்கு விளக்கு* ஏகாதசியன்று பெருமாளுக்கு துளசிமாலை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !