உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் தனுசு

தனுசுவருமானத்திற்கு ஏற்ப செலவழிக்கும் தனுசு ராசி அன்பர்களே! ராசிநாதன் குரு சாதகமாக இருக்கும் நிலையில் புத்தாண்டு பிறக்கிறது. குருபகவான் தற்போது 11-ம் இடமான துலாம் ராசியில் இருப்பது சிறப்பான அம்சம்.  பலவீனமான விஷயம் கூட பலமாகி நன்மையளிப்பதை உணர்வீர்கள். அவர் 2018 அக். 5ல் 12-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறியபின் நன்மை தர இயலாது. குரு 12-ம் இடத்தில் இருக்கும் போது வீண் அலைச்சல் ஏற்படும். குரு 2019 பிப்.10ல் உங்கள் ராசிக்கு மாறுகிறார். அப்போதும் நற்பலன் உண்டாகாது. ராகு 8-ம் இடமான கடகத்தில் இருப்பதும் சிறப்பானதல்ல. உறவினர் வகையில்  பிரச்னை உருவாகலாம். 2019 பிப்ரவரி 13ல் ராகு 7-ம் இடமான மிதுனத்திற்கு வந்தாலும் நன்மை தர வாய்ப்பில்லை. யாரிடமும் கவனமாக பழக வேண்டும்கேது உங்கள் ராசிக்கு 2-ம் இடமான மகரத்தில் இருப்பது  சிறப்பான இடம் அல்ல. அரசு வகையில் பிரச்னை வரலாம். 2019 பிப்.13ல் கேது  உங்கள் ராசிக்கு வருகிறார். அதனால் முயற்சியில் தடை, உடல் உபாதைஏற்படலாம். சனிபகவான் உங்கள் ராசியில் இருப்பதால் உடல்நலம் பாதிக்கப் படலாம். வெளியூரில் தங்கும் சூழல் உருவாகும்.  2018 ஏப்ரல் –  செப்டம்பர் குரு சிறப்பாக இருப்பதால் தடை குறுக்கிட்டாலும் முறியடித்து வெற்றி காண்பீர்கள். பொன், பொருள் சேரும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். ஆடை, அணிகலன்கள் வாங்கலாம். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். பெண்கள் உறுதுணையாக  இருப்பர். வசதியான வீட்டுக்கு குடிபுக வாய்ப்புண்டு.பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். முயற்சி செய்தால் இழந்த பதவி மீண்டும் கிடைக்கும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். விடாமுயற்சியால் வேலையின்றி இருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நம்பிக்கையுள்ள நண்பர், பெரியோர்கள் ஆலோசனையுடன் முன்னேற்றம் காணலாம்.  வாடிக்கையாளர்கள் அனுகூலமாக இருப்பர். கலைஞர்களுக்கு எதிரி தொல்லை, அவப்பெயர், போட்டி முதலியன மறையும்.  எதிர்பார்த்த புகழ், பாராட்டு வந்து சேரும். அரசியல்வாதிகள் பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும். மாணவர்கள் விரும்பிய நிறுவனத்தில் சேரும் வாய்ப்பு உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணை நிற்கும். விவசாயிகளுக்கு நெல், மஞ்சள், கோதுமை, கொண்டைக்கடலை, கேழ்வரகு போன்றவற்றில் அதிக விளைச்சல் உண்டாகும். வழக்கு விவகாரத்தில் மெத்தனம் வேண்டாம். பெண்கள் குடும்பத்தில் முக்கிய இடம் வகிப்பர். அக்கம்பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். குடும்பத்தாரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு  பதவி தேடி வரும்.  2018 அக்டோபர் – 2019 ஏப்ரல் வீண்பிரச்னை, அலைச்சல் ஏற்படலாம். தம்பதியிடையே சண்டை, சச்சரவு வரலாம். ஒருவருக்கொருவர்  விட்டுக் கொடுத்து போகவும்.  2019 பிப். 10க்கு பின்  குடும்பத்தில் குழப்பம் உருவாகலாம் மனக்கவலை, பொருள் இழப்பு ஏற்படலாம்.  பணியாளர்கள் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால் கோரிக்கை நிறைவேறும். அரசு வேலையில் இருப்பவர்கள் விழிப்புடன் இருப்பது அவசியம். 2019 பிப்10க்கு பிறகு முயற்சித்தால் இழந்த பதவி மீண்டும் கிடைக்கும்.  தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எதிலும் புதிய முதலீடு செய்ய வேண்டாம். கலைஞர்களுக்கு  போதிய வருமானம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க சக கலைஞர்கள் உதவுவர். அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து  படித்தால் மட்டுமே பலன் கிடைக்கும். 2019 பிப். 10 க்கு பிறகு குருவின்  பார்வையால் ஆசிரியர்களின் உதவி கிடைக்கும். விவசாயிகள் அனாவசிய செலவை குறைப்பது நல்லது. யாரையும் நம்பி பொறுப்பை கொடுத்து விட வேண்டாம். மானாவாரி பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும்.  பெண்கள்  குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. 2019 பிப்.10 க்கு பிறகு குருவின்  பார்வையால் தம்பதியர் இடையே ஒற்றுமை மேம்படும். வேலைக்கு செல்லும் பெண்கள் வளர்ச்சி காண்பர்.பரிகாரம்:*  சனிக்கிழமையில் அனுமனுக்கு அர்ச்சனை*  சதுர்த்தியன்று விநாயகருக்கு வழிபாடு*  தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு தீபம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !