தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்
தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் துலாம்
துலாம்துலாம்: சித்திரை: உயர்வு காத்திருக்குதைரிய வீரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2ம் பாதங்களான கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு, புதன் ராசிநாதனாகவும், 3,4ம் பாதங்களான துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர். பிறக்கும் பராபவ வருடம் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முயற்சியாலும் கடும் உழைப்பாலும் முன்னேற்றம் காணும் வருடமாக இருக்கும். வருடத்தின் தொடக்கத்தில் சில சங்கடங்களை சந்தித்தாலும் அதன்பிறகு நிலை மாறும், நினைத்தது நடந்தேறும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பாக்ய குரு, லாப கேது, சத்ரு ஜெய ஸ்தான சனி என்று அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் முன்னேற்றத்தையும் வழங்குவார்கள், செல்வம் செல்வாக்கு அந்தஸ்து உயரும்.சனி சஞ்சாரம்: 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கண்டக சனியால் சங்கடங்கள் ஏற்படும், உடல்நிலையில் பாதிப்பு, குடும்பத்தில் குழப்பம், தொழிலில் நெருக்கடி, நண்பர்களுக்குள் வருத்தம், கணவன் மனைவிக்குள் பிரச்னை என்று உருவாகும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சத்ரு ஜெய சனியால் இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். உடல்நிலை சீராகும், எதிர்ப்பு விலகும், நினைத்ததை சாதிக்கும் நிலை உண்டாகும்.ராகு - கேது சஞ்சாரம்: நவ. 13 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், அதன்பிறகு ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால், 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகு, ஆற்றலை அதிகரிப்பார், செல்வாக்கை உயர்த்துவார், எடுத்த வேலைகளை வெற்றியாக்குவார். நவ. 13 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பண வரவை அதிகரிப்பார், வியாபாரம் தொழிலில் லாபத்தை ஏற்படுத்துவார், செல்வாக்கை உயர்த்துவார். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை லாப கேது வசதி வாய்ப்புகளை அளிப்பார், செல்வம் செல்வாக்கை உயர்த்துவார். நவ. 13 முதல் கேது ஜீவன ஸ்தானத்திலும், ராகு சுக ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும், செய்துவரும் தொழிலிலும் பார்த்துவரும் வேலையிலும் கூடுதல் அக்கறை தேவைப்படும்.குரு சஞ்சாரம்: 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் தொடக்கத்தில் குருவின் பார்வைகளும், மே 26 முதல் லாப குருவும் அவருடைய பார்வைகளும் முன்னேற்றத்தை வழங்கும், முயற்சிகளை வெற்றியாக்கும், நினைத்ததை சாதிக்க வைக்கும், பொன்பொருள் சேர்க்கையை உண்டாக்கும், புகழை ஏற்படுத்தும், கண்டக சனியின் பாதிப்பிலிருந்து விடுவிக்கும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 26 வரை பாக்ய குருவும், அதன்பின் கடக குருவின் பார்வைகளாலும் பொருளாதார நிலை உயரும், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும், சிலருக்கு புதிய தொழில் அமையும், குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். புதிய சொத்து சேரும்.சூரிய சஞ்சாரம்: 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஆத்ம காரகனான சூரியன், கார்த்திகை, மாசி, ஆனி, ஆடி ஆகிய நான்கு மாதங்களும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்கழி, பங்குனி, ஆடி, ஆவணி ஆகிய நான்கு மாதங்களும் 3,6,10,11ம் இடங்களில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும், தடைபட்ட வேலைகள் நடந்தேறும், செல்வம் செல்வாக்கு உயரும், வியாபாரம், தொழில் லாபம்தரும், உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும், அரசுவழி வேலைகள் சாதகமாகும், அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு பதவி கிடைக்கும்.பொதுப்பலன்: பராபவ வருடம் உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தை உண்டாக்கும் வருடமாகும். இதுவரை போராட்டமாகவே இருந்த உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும், வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும், உழைப்பிற்கேற்ற ஆதாயமும் முயற்சிக்கேற்ற உயர்வும் ஏற்படும், பணம், புகழ், செல்வாக்கு, அந்தஸ்துடன் வாழும் நிலை உருவாகும்.தொழில்: செய்துவரும் தொழில் முன்னேற்றமடையும், போட்டியாளரால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும், பணியாளர் ஆதரவு கிடைக்கும், வாடிக்கையாளர் அதிகரிப்பர். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், கெமிக்கல் தயாரிப்பு மற்றும் விற்பனை, மெடிக்கல், உணவகம், விவசாயம் சார்ந்த தொழில்கள், ரசாயன பொருட்கள், குடிநீர் சார்ந்த தொழில்கள் மற்றும் விற்பனை, பப்ளிகேஷன், ஷேர் மார்க்கெட், நிதி நிறுவனம், எக்ஸ்போர்ட், ஆடை ஆபரணம் காலண்டர், நோட்டுப் புத்தகம் தயாரிப்பு மற்றும் விற்பனை, தனியார் பள்ளிகள், ஏ.ஐ., யூட்யூப், சின்னத்திரை, சினிமா மற்றும் அதைச்சார்ந்த தொழில்கள் லாபம்தரும்.பணியாளர்கள்: உழைப்பிற்கேற்ற ஆதாயமில்லை, திறமைக்கேற்ற மரியாதை இல்லை என்று வருத்தப்பட்டு வந்தவர்கள்மீது நிர்வாகத்தின் பார்வை படும், எதிர்பார்த்த பொறுப்பும் சலுகைகளும் கிடைக்கும், வேலையில் இருந்த பயம் போகும், அரசு பணியில் இருப்பவர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவும் எதிர்பார்த்த மாற்றமும் தேடிவரும்.பெண்கள்: குடும்பத்தில் நிம்மதி இல்லை, வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை என்றிருந்த நிலையில் மாற்றம் ஏற்படும், குடும்பத்தினர் ஆதரவு உண்டாகும், வேலைப் பார்த்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும், திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும், சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும், வாழ்க்கைத்துணையுடன் இணக்கமான நிலை ஏற்படும், பொன் பொருள் சேரும், உடல்நிலை சீராகும்.கல்வி: எந்த ஒன்றிலும் முழுமையான கவனத்தை செலுத்தக்கூடிய உங்களுக்கு குரு பார்வைகள் சாதகமாக இருப்பதால் பொதுத் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும், உயர் கல்வி கனவு நனவாகும்.உடல்நிலை: கடுமையான உழைப்பின் காரணமாகவும், ஓய்வில்லா நிலையினாலும், சிலருக்கு பரம்பரை வழியாகவும் ஏற்பட்ட நோய்களால் அவதிக்கு ஆளாகி வந்த நிலையில் மாற்றம் ஏற்படும், மருந்து மாத்திரை மருத்துவமனை என்ற நிலை மாறும், உடல்நிலையில ஏற்பட்ட பாதிப்புகள் சிகிச்சையால் குணமாகும், ஆரோக்கியத்துடன் நடை போடக்கூடிய நிலை உண்டாகும்.குடும்பம்: உங்கள் நீண்ட நாள் கனவுகள் நனவாகும், பிறரைப்போல் வாழ முடியவில்லையே என்ற ஏக்கம் உங்களை விட்டு விலகும், சொந்த இடம், வீடு, வாகனம் என்ற முயற்சி நிறைவேறும், கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட சச்சரவுகள் முடிவிற்குவரும், ஒருவரை ஒருவர் ஆலோசித்து செயல்படுவீர்கள், சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும், பிள்ளைகளுடைய கல்வி, திருமணம் என்ற முயற்சியை மேற்கொள்வீர்கள், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும், சிலர் சொந்த வீட்டில் பால் காய்ச்சுவீர்கள், பெரியோர் ஆதரவு உங்களை வழிநடத்தும்.பரிகாரம்: மதுராந்தகம் திருவெண்காட்டீஸ்வரரை வழிபட வேண்டுதல் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும்.சுவாதி: தொட்டதெல்லாம் பொன்னாகும்அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன், யோகக்காரகன் ராகு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் பராபவ வருடம் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும் காலமாக இருக்கும், வாழ்க்கையின் அத்தனை நெருக்கடிகளையும் சந்தித்த உங்களுக்கு இனி நடப்பதெல்லாம் நன்மையாகவே இருக்கும், ஆழ்கடலில் தத்தளித்து வந்தவர் படாதபாடுபட்டு கரையேறியதுபோல் உங்கள்நிலை மாறும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும், செல்வம் செல்வாக்கு அந்தஸ்து உயரும்.சனி சஞ்சாரம்: கடந்த ஐந்து ஆண்டுகளாக அர்த்தாஷ்டம மற்றும் பூர்வ புண்ணிய சனியால் வேதனைகளையும் சோதனைகளையும் அனுபவித்த வந்த உங்களுக்கு இந்த வருடம் யோகமான வருடமாக இருக்கும், சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் சோர்ந்து கிடந்த உங்களை சுறுசுறுப்பாக்குவார், வேலையில்லை வருமானமில்லை என்ற நிலையை மாற்றுவார், வியாபாரம் தொழிலில் லாபத்தை வழங்குவார், போட்டி பகை என்ற நிலைகளை இல்லாமல் செய்வார், உங்கள் ஆற்றலை அதிகரிப்பார், வெறும் கனவாகவே இருந்தவற்றை நனவாக்கி வெற்றிநடை போடவைப்பார், வழக்கை வெற்றியாக்குவார், வாழ்க்கையை வளமாக்குவார்.ராகு - கேது சஞ்சாரம்: நவ. 13 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், அதன்பிறகு ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால், நவ.13 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பண வரவை அதிகரிப்பார், பொருளாதார நிலையை உயர்த்துவார், வசதி வாய்ப்புகளை அதிகரிப்பார், செல்வம் செல்வாக்கை ஏற்படுத்துவார். புதிய இடம், வீடு, வாகனம் என்ற முயற்சியை வெற்றியாக்குவார். நவ. 13 முதல், தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் கேதுவும், சுக ஸ்தானமான நான்காம் இடத்தில் ராகுவும் சஞ்சரிப்பதால் செய்துவரும் தொழிலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும், பணியாளர்கள் ஒத்துழைப்பு என்பது எதிர்பார்ப்பதுபோல் இல்லாமல் போகும், வேலைப்பார்க்கும் இடத்திலும் குற்றம் குறை என்ற நிலைக்கு ஆளாக வேண்டிவரும், என்னதான் உழைத்தாலும் அதற்குரிய பலன் என்பது பூசணிக்காய்போல் கிடைக்க வேண்டிய அளவில் நெல்லிக்காய் அளவிற்குத்தான் கிடைக்கும், எனவே இக்காலத்தில் அனைத்திலும் நிதானம் தேவை.குரு சஞ்சாரம்: வருடத்தின் தொடக்கமே உங்களுக்கு அமோகமாக இருக்கிறது, பாக்ய குருவும் அவருடைய பார்வைகளும் உங்கள் நிலையை உயர்த்தும், உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவுகளை நனவாக்கும், வெளி வட்டாரத்தில் உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். மே 26 முதல் பத்தாம் இடமான கடகத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குருவின் பார்வைகளால் பொருளாதார நிலை உயரும், மனதில் நிம்மதி உண்டாகும், உடல்நிலை சீராகும், சிலருக்கு புதிய தொழில் அமையும்.சூரிய சஞ்சாரம்: ஆத்ம காரகனான சூரியன், மார்கழி, பங்குனி, ஆடி, ஆவணி ஆகிய நான்கு மாதங்கள் உங்கள் ராசிக்கு 3,6,10,11ம் இடங்களில் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் உங்களிடம் புதிய நம்பிக்கை உண்டாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்குவரும், செல்வம் செல்வாக்கு அந்தஸ்து உயரும், வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.பொதுப்பலன்: இதுவரை பிறரை நம்பி வாழ்ந்துவந்த நீங்கள் இந்த பராபவ வருடத்தில் பிறரை வாழ வைப்பவர்களாக மாறுவீர்கள், உங்கள் எதிர்பார்ப்புகள் ஒவ்வொன்றும் பூர்த்தியாகும், கனவுகள் யாவும் நனவாகும், பொன் பொருள் புகழ் சேரும்.தொழில்: இதுவரை பல்வேறு முயற்சிகள் செய்தும் போட்ட பணத்தைக்கூட எடுக்க முடியவில்லை, தொழிலும் சரியாக நடக்கவில்லை என்று வருத்தப்பட்டு வந்தவர்களுக்கு பராபவ வருடத்தில் அந்தநிலை மாறும். பணியாளர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கமிஷன் வியாபாரம், ரசாயனம், ஹோட்டல், திருமண மண்டபம், விடுதி, ட்ராவல்ஸ், பில்டிங் டிசைனிங், டெக்கரேஷன், ஆடை வணிகம், ஜுவல்லரி, கால்நடை வளர்ப்பு, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை என்று அனைத்திலும் ஆதாயம் கிடைக்கும், சினிமா, தொலைக்காட்சி வலைதளம் வளர்ச்சி அடையும்.பணியாளர்கள்: வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். கடுமையாக உழைத்தும் முன்னேற்றம் இல்லை என்ற நிலை மாறும், நிர்வாகத்தின் ஆதரவும் சலுகைகளும் கிடைக்கும், அரசு பணியில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட வழக்குகள் முடிவிற்குவரும், தடைபட்ட பதவி உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும்.பெண்கள்: சமீப காலமாக சங்கடப்பட்டு வந்த உங்களுக்கு, பிறக்கும் பராபவ வருடம் மகிழ்ச்சியான வருடமாக இருக்கும், உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் சந்தித்த தொல்லைகள் விலகும். உற்சாகமாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும், குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும், கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும், திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும், சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும், பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும், வேலைப் பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை ஏற்படும், பொன் பொருள் சேரும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும்.கல்வி: பொதுத்தேர்வு போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும், படிப்பின் மீது ஆர்வம் ஏற்படும், உயர்கல்விக்கான முயற்சி வெற்றியாகும், விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும், சிலர் வெளிநாடுகளுக்கும் செல்வீர்கள்.உடல்நிலை: நீண்ட நாட்களாக ஆரோக்கியத்தில் குறைபாட்டோடும், ஏதாகிலும் ஒரு பிரச்னையோடும் மருந்து மாத்திரையோடு வாழ்ந்து வந்தவர்களுக்கு பராபவ வருடம் நோய்தீர்க்கும் வருடமாக இருக்கும், ஆறாமிட சனியால் குணமாகாது என்று மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் நிலையிலும் அதிசயமான மாற்றம் ஏற்படும். அல்சர் நீரழிவு ரத்தக்கொதிப்பு கட்டுப்படும். ஆரோக்கியம் சீராகும்.குடும்பம்: ஐந்தாண்டுகளுக்கு மேலாக நிறையவே சங்கடங்களை அனுபவித்த உங்களுக்கு, பிறக்கும் பராபவ ஆண்டு யோகமான ஆண்டாக இருக்கும். இனி நீங்கள் நினைத்தது நடக்கும், எதிர்பார்த்தது கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். இடம் வீடு வாகனம் என்ற முயற்சி வெற்றியாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.பரிகாரம்: ஜேஷ்டா தேவியை வழிபட சங்கடங்கள் விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.விசாகம்: நல்லநேரம் வந்தாச்சுஞானக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2,3ம் பாதங்களான துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 4 ம் பாதமான விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும் உள்ளனர்.பிறக்கும் பராபவ வருடம் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் தொடக்கமே வசந்த காலமாகும், குடும்பம், தொழில், உத்தியோகம் என்று எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 26 முதல் பாக்ய குருவும், நவ.13 முதல் சகாய ஸ்தான ராகுவும் வசதி வாய்ப்புகளை அதிகரிப்பர், ஆரோக்கியமாகவும் செல்வ செழிப்போடும் வாழ வைப்பர்.சனி சஞ்சாரம்: விசாகம் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், சோதனைகளையும் வேதனைகளையும் சுமந்து வாழ்ந்து வந்த உங்களை சாதனைகள் புரிய வைப்பார், எடுத்த காரியம் யாவிலும் வெற்றி என்ற நிலையினை உண்டாக்குவார், ஆரோக்கியத்தை மேம்படுத்துவார், செல்வாக்கை உயர்த்துவார், வம்பு வழக்குகளில் வெற்றியை அளிப்பார், அரசியல் வாதிகளுக்கு புதிய பொறுப்பு பதவி என்று உயர்வினை ஏற்படுத்துவார், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் நிம்மதியையும், வியாபாரம் தொழிலில் லாபத்தையும், பொருளாதாரத்தில் உயர்வினையும் உண்டாக்குவார்.ராகு - கேது சஞ்சாரம்: நவ. 13 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், அதன்பிறகு ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால், 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் பணவரவு அதிகரிக்கும், பொருளாதார நிலை உயரும், வசதி வாய்ப்புகள் உண்டாகும், நவ. 13 முதல், பத்தாம் இடத்தில் கேதுவும், நான்காம் இடத்தில் ராகுவும் சஞ்சரிப்பதால் செய்துவரும் தொழிலில் கூடுதல் கவனம் தேவைப்படும், உடல்நிலையிலும் கவனமாக இருப்பது நன்மையாகும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை அனைத்திலும் நிதானம் தேவை, அதன்பின் மூன்றாமிட ராகுவால் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும், வரவேண்டிய பணம் வரும், துணிச்சலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.குரு சஞ்சாரம்: விசாகம் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 26 வரை பாக்ய குரு சுபிட்சமான நிலையை ஏற்படுத்துவார், சமூகத்தில் உங்கள் நிலை உயரும், படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவுகள் நனவாகும், அதன்பின் குருவின் பார்வைகள் உங்களைப் பாதுகாக்கும். 4ம் பாதத்தினருக்கு மே 26 முதல் பாக்ய ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதுடன் உங்கள் ராசியையும், ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானையும் பார்ப்பதால் சங்கடங்கள் எல்லாம் விலகும், குடும்பம், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும், பணம், புகழ், அந்தஸ்து ஏற்படும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.சூரிய சஞ்சாரம்: விசாகம் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஆத்ம காரகனான சூரியன், மார்கழி, பங்குனி, ஆடி, ஆவணி ஆகிய நான்கு மாதங்களும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு தை, சித்திரை, ஆவணி, புரட்டாசி ஆகிய நான்கு மாதங்களும் 3,6,10,11ம் இடங்களில் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும், எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும், உடல்நிலை சீராகும், எதிர்ப்பு வம்பு வழக்கு என்பதெல்லாம் வந்த வழி தெரியாமல் போகும். வேலையில் உயர்வு ஏற்படும், வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும், புதிய தொழில் தொடங்க முடியும், பணவரவு அதிகரிக்கும், கடன்தொல்லை விலகும், வெளிநாடு செல்வதற்கு எதிர்பார்த்த அனுமதிகள் கிடைக்கும்.பொதுப்பலன்: பராபவ வருடத்தில் உங்கள் வாழ்க்கையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும், மறைந்த உங்கள் செல்வாக்கு வெளிப்படும், திருமண முயற்சி வெற்றியாகும், குழந்தை பாக்யம் கிடைக்கும், ஆரோக்கியம் சீராக இருக்கும், நோய்நொடிகள் விலகும், சிலருக்கு சொந்த வீடு, வாகனம் என்ற நீண்டநாள் கனவு நனவாகும், செல்வாக்கோடு வாழும் நிலை உண்டாகும்.தொழில்: தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும், போட்டியாளர்கள் பலமிழப்பர், பணியாளர்கள் உங்கள் முயற்சிக்கு உதவியாக இருப்பார்கள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கமிஷன் வர்த்தகம், ரசாயன தொழில்கள், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த தொழில்கள், ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிப்பு மற்றும் விற்பனை, இன்ஜினியரிங், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள், உணவகம், திருமண மண்டபம், விடுதி, ட்ராவல் ஏஜென்சி, பில்டிங் டிசைனிங் அண்ட் டெக்கரேஷன், ஆடை வணிகம், ஜுவல்லரி, கால்நடை வளர்ப்பு, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை வளர்ச்சி அடையும்.பணியாளர்கள்: வேலையில் இருந்த நெருக்கடிகள் நீங்கும், திறமைக்கும் உழைப்பிற்கும் உரிய மரியாதைக் கிடைக்கும். சிலருக்கு தற்போதுள்ள வேலையைவிட வேறு இடத்தில் அதிக சம்பளத்துடன் வேலைக்கிடைக்கும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட போராட்டநிலை மாறும். தடைபட்ட பதவி உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும்.பெண்கள்: குரு பகவானின் அம்சமான உங்களுக்கு குடும்பத்தில் மதிப்பு ஏற்படும், வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும், கணவரின் ஆதரவால் துணிச்சல் அதிகரிக்கும். உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும், கையிருப்பு கூடும், பொன் பொருள் சேரும், உறவுகள் மத்தியில் மதிப்புடன் வாழ்வீர்கள்.கல்வி: பிறரை வழி நடத்துவதற்காகவே பிறந்த உங்களுக்கு, பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும், பொறியியல், மருத்துவம், சட்டம் என்று விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.உடல்நிலை: மனதளவிலும், உடல் அளவிலும் பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவரை சந்தித்து மருந்து மாத்திரை என்று வாழ்ந்து வந்தவர்கள் அதிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக நடைபோடுவீர்கள். சிலருக்கு மாற்று சிகிச்சையால் நோய்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்.குடும்பம்: பராபவ வருடம் குடும்பத்தில் சுபிட்சத்தை உண்டாக்கும் வருடமாக இருக்கும், ஆளுக்கொரு திசையாக இருந்த தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். தன் குடும்பம் தன் பிள்ளைகள் என்ற எண்ணத்துடன் வாழத் தொடங்குவீர்கள். சொந்த வீடு, வாகனம், பொன் பொருள், சேமிப்பு என்று வாழ்க்கை வளமாகும். குடும்பத்தில் மங்கள ஒசை கேட்கும்.பரிகாரம்: திருத்தங்கல் நின்ற நாராயணரை வழிபட குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும், நிம்மதி உண்டாகும்.