உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கடகம்

 வார பலன் (4.9.2026 - 10.9.2026)கடகம்: திருச்செந்தூர் முருகனை வழிபட சங்கடம் விலகும்புனர்பூசம் 4: அலைச்சல் அதிகரித்தாலும் தேவைக்கேற்ப பணம் வரும். பூர்வீக சொத்து பிரச்னை விலகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.பூசம்: பாக்கிய சனி வக்கிரம் அடைந்தாலும் குரு பார்வைகள் சாதகமாக இருப்பதால் சங்கடம் விலகும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகி இணக்கம் உண்டாகும்.ஆயில்யம்: புதன் சகாய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் குழப்பம் விலகும். திட்டமிட்டு செயல்படுவீர்கள்.  எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். முயற்சி வெற்றியாகும். வங்கியில் கேட்ட கடன் கிடைக்கும். புதிய சொத்து சேரும். கையில் பணம் புரளும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !