உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கடகம்

வார பலன் (6.6.2025 - 12.6.2025)கடகம்: ஏகாம்பரேஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.புனர்பூசம் 4: குரு விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வை உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தியாக்கும். செல்வாக்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வீடு, நிலம், வாகனம் வாங்குவீர்கள்.பூசம்: அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் சனி, ராகுவிற்கு குருவின் பார்வை உண்டாவதால் உடல்நிலை சீராகும். வழக்குகள் சாதகமாகும். உங்கள் செல்வாக்கு உயரும். குடும்ப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்திற்குள் ஏதேனும் ஒரு பிரச்னை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். சூரியனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் நெருக்கடி விலகும்.ஆயில்யம்: சூரியன் சஞ்சாரமும் குருவின் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் நினைத்த வேலை நடந்தேறும். எதிர்பார்த்த பணம் வரும். அரசு வழி முயற்சி சாதகமாகும். தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !