/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் கடகம்
வார பலன் (25.7.2025 - 31.7.2025)கடகம்: பைரவரை வழிபாட்டால் நல்லது நடக்கும்.புனர்பூசம் 4: விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு செலவுகளை அதிகரிப்பார். அவரால் உங்களுக்கிருந்த நெருக்கடி விலகும். உடல்நிலை சீராகும். எதிரிகளின் தொல்லை நீங்கும்.பூசம்: சனி பகவான் வக்கிரம் அடைந்துள்ளார். அங்கு சஞ்சரிக்கும் ராகுவிற்கு குரு பார்வை உண்டாவதால் வேலைகளில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். மன பயம் போகும். வியாபாரம் தொழிலில் அக்கறை கூடும். உங்கள் செல்வாக்கு உயரும்.ஆயில்யம்: விரய ஸ்தானத்தில் புதன் சஞ்சரிப்பதால் செலவு அதிகரிக்கும் என்றாலும் அங்கு சுக்கிரனும் சஞ்சரிப்பதால் செலவிற்கேற்ற வருமானம் வரும். பொருளாதார நெருக்கடி நீங்கும். துாக்கமின்றி தவித்த நிலைமாறும்.