/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் கடகம்
வார பலன் (15.8.2025 - 21.8.2025)கடகம்: ராமநாத சுவாமியை வழிபட நன்மை உண்டாகும். துன்பம் தீரும்.புனர்பூசம் 4: விரய குருவின் பார்வைகளால் உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும். தாய்வழி உறவு ஆதரவு கிடைக்கும். உடல்நிலை சீராகும். வழக்கு முடிவிற்கு வரும். எதிர்பார்த்த வாய்ப்பு தேடிவரும். பூசம்: ராகுவின் மீது குரு பார்வை உண்டாவதால் சங்கடம் நீங்கும். செவ்வாயால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். சகோதரர்களின் ஆதரவால் தடைபட்ட வேலை நடக்கும்.ஆயில்யம்: புத பகவான் லாபத்தை ஏற்படுத்துவார். எதிர்பார்த்த பணம் வரும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி விலகும். மன பயம் விலகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும்.