வார ராசிபலன்
வார ராசிபலன் கடகம்
வார பலன் ( 31.10.2025 - 6.11.2025 )கடகம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடம் விலகும்.புனர்பூசம் 4: ஜென்ம குரு அலைச்சலை ஏற்படுத்துவார். அவருடைய பார்வையால் குழப்பம் விலகும். செல்வாக்கு வெளிப்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். புதிய சொத்து சேரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். திட்டமிட்ட வேலை நடக்கும். வெள்ளிக்கிழமை கவனம் தேவை.பூசம்: அஷ்டம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் செய்து வரும் தொழிலில் அக்கறை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகத் தொல்லை ஏற்படும். ஒரு சிலருக்கு உடல்நிலையில் பாதிப்பு உண்டாகும். வெள்ளி சனிக்கிழமையில் அனைத்திலும் பொறுமை காப்பது நல்லது.ஆயில்யம்: புதன் வக்கிரம் அடைந்திருப்பதால் அனைத்திலும் நிதானமாக செயல்படுவது அவசியம். புதிய சொத்து வாங்கும்போதும், ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போதும் படித்துப் பார்ப்பது அவசியம். சனி ஞாயிறுக்கிழமைகளில் கவனம் தேவை.சந்திராஷ்டமம்: 31.10.2025 அதிகாலை 3:09 மணி - 2.11.2025 காலை 8:19 மணி