/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் கடகம்
வார பலன் (14.11.2025 - 20.11.2025)கடகம்: பைரவரரை வழிபட சங்கடம் விலகும். நல்லது நடக்கும்.புனர்பூசம் 4: செவ்வாய்க்கிழமை முதல் குரு வக்ரமடைவதால் அலைச்சல் குறையும். செலவு அதிகரிக்கும். நிம்மதியில்லா நிலை உண்டாகும். உறவினர்களுக்குள் மனக்கசப்பு வந்து நீங்கும்.பூசம்: திங்கள் கிழமை முதல் அஷ்டம சனி வக்ர நிவர்த்தியாவதுடன் அங்கு ராகுவும் சஞ்சரிப்பதால் உடல், மன நிலையில் எதிர்பாராத சங்கடம் ஏற்படும். எடுக்கும் வேலை இழுபறியாகும். எதையும் போராடி முடிப்பீர்கள்.ஆயில்யம்: நான்காமிட புதன் திறமையை வெளிப்படுத்துவார். திட்டமிட்டு செயல்பட வைப்பார். எடுத்த வேலைகளை வெற்றியாகும். பண வரவை அதிகரிப்பார். புதிய இடம் வீடு, வாகனம் வாங்கும் கனவை நனவாக்குவார்.