உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கடகம்

வார பலன்  (21.11.2025 - 27.11.2025)கடகம்: பைரவரை வழிபட சங்கடம் விலகும்.புனர்பூசம் 4: குரு வக்கிரம் அடைந்திருப்பதால் உங்கள் வேலைகளில் நிதானம் தேவை. பண விவகாரத்தில் எச்சரிக்கை தேவை. பிறரை நம்பி உங்கள் வேலை எதையும் ஒப்படைக்க வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லது நடக்கும். வியாழக்கிழமை விழிப்புடன் செயல்படுவது நல்லது.பூசம்: சனி பகவான் நெருக்கடியை தருவார். எதிர்பாராத சங்கடம் தோன்றும். வருமானம் இழுபறியாகும். வாகனத்தால் செலவு ஏற்படும். பெரிய மனிதர்களால் கிடைத்து வந்த லாபத்தில் தடை உண்டாகும். அனைத்திலும் எச்சரிக்கை அவசியம்.ஆயில்யம்: புதன் திட்டமிட்டு செயல்பட வைப்பார். வேலைகளை வெற்றியாக்குவார். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். இடம், வீடு, வாகனம் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.சந்திராஷ்டமம்: 27.11.2025 காலை 10:50 மணி - 29.11.2025 மாலை 4:16 மணி 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !