வார ராசிபலன்
வார ராசிபலன் கடகம்
வார பலன் (16.1.2026 - 22.1.2026)கடகம்: குலதெய்வத்தை வழிபட சங்கடம் விலகும்.புனர்பூசம் 4: சப்தம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களில் நிதானம் தேவை. எதிர்பாலினர் விஷயத்தில் ஒரடி விலகி இருப்பது நல்லது.பண விவகாரத்தில் கூடுதல் எச்சரிக்கைத் தேவை.பூசம்: அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும், ராகுவும் நெருக்கடிக்கு ஆளாக்குவர். உடல், மன நிலையில் பின்னடைவையும் சோர்வையும் ஏற்படுத்துவர். வருமானம் இழுபறியாகும் பெரியோரின் ஆதரவு கிடைக்கும். புதன் வியாழன் அன்று அனைத்திலும் பொறுமை தேவை.ஆயில்யம்: இந்த வாரத்தில் கவனமாக செயல்படுவதால் சங்கடம் இருக்காது. குடும்பத்தினரை அனுசரிப்பதுடன் அவர்களுடைய ஆலோசனைகளையும் கேட்பது அவசியம். பண விவகாரத்தில் கூடுதல் கவனம் தேவை.சந்திராஷ்டமம்: 21.1.2026 அதிகாலை 2:28 மணி - 23.1.2026 காலை 8:22 மணி