/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் கடகம்
வார பலன் (30.1.2026 - 5.2.2026)கடகம்: தில்லை நடராஜரை வழிபட வேண்டுதல் நிறைவேறும்.புனர்பூசம் 4: குரு வக்கிரம் அடைந்திருப்பதால் உங்களுக்கிருந்த நெருக்கடி விலகும். வருமானம் அதிகரிக்கும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும்.பூசம்: சனி ராகு சஞ்சரித்தாலும் சகாய ஸ்தானாதிபதி புதனால் தடைபட்ட வேலை நடக்கும். வர வேண்டிய பணம் வரும். தொழில் முன்னேற்றம் அடையும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும்.ஆயில்யம்: தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். வருமானம் உயரும். நெருக்கடிக் கொடுத்து வந்த கடன் அடையும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சியாகும். சாதுரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். கலைஞர்கள் நிலை உயரும்.