வார ராசிபலன்
வார ராசிபலன் கடகம்
வார பலன் ( 27.2.2026 - 5.3.2026)கடகம்: பைரவரை வழிபட சங்கடங்கள் விலகும்.புனர்பூசம் 4: உங்களுக்கேற்பட்ட பிரச்சனைகள் நெருக்கடிகள் விலகும். செய்துவரும் தொழில் முன்னேற்றமடையும். வருமானம் அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனை விலகும். பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு செல்வாக்கு கூடும்.பூசம்: தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய சொத்து சேரும் என்றாலும் அஷ்டம ஸ்தானத்தில் ஆறு கிரகங்கள் சஞ்சரிப்பதால் அனைத்திலும் நிதானம் தேவை. ஆயில்யம்: தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். வருமானம் உயரும். நெருக்கடிகளை ஏற்படுத்திய கடன்கள் அடையும். வேலையில் இருப்பவர்கள் உடன் பணிபுரிவோரை அனுசரித்துச்செல்வது செல்வது அவசியம். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சியாகும்.