உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கடகம்

 வார பலன் ( 6.3.2026 - 12.3.2026 )கடகம்: சங்கரநாராயணரை வழிபட சங்கடம் விலகும்.புனர்பூசம் 4: கடந்த கால நெருக்கடி நீங்கும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும்.  பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். இழந்த செல்வாக்கை மீண்டும் அடைவீர்.பூசம்: சனிபகவானால் இதுவரை இருந்த தடை விலகும். உடல்நிலையும் மனநிலையும் சீராகும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். வழக்கு விவகாரம் சாதகமாகும். அரசியல், பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்போரின் செல்வாக்கு உயரும்.ஆயில்யம்: வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். நினைத்ததை சாதிப்பீர். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !